ஸ்னாப்சாட்டில் கல்யாணப் போட்டோ... திருமணமான 2 மணி நேரத்தில் டைவர்ஸை அறிவித்த கணவர்!

வாக்குறுதியை மீறி தங்களது திருமணப் புகைப்படங்களை ஸ்நாப்ஷாட்டில் வெளியிட்டதால், திருமணமான இரண்டே மணி நேரத்தில் மனைவியை விவாகரத்து செய்வதாக சவுதி மணமகன் ஒருவர் அறிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ரியாத்: சமூக வலைதளத்தில் தங்களது திருமணப் புகைப்படங்களை பதிவிட்டதற்காக திருமணமான இரண்டே மணி நேரத்தில் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார் சவுதியைச் சேர்ந்த மணமகன் ஒருவர்.

சவுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் ஏற்பட்டது. திருமணத்திற்கு முன்னதாக அவர் மணப்பெண்ணிடம் நிபந்தனை ஒன்றை விதித்தார்.

Saudi Man Dumps Bride 2 Hours After Wedding

அதாவது திருமணத்திற்குப் பிறகு மணப்பெண் தன்னுடைய புகைப்படங்கள் எதையும் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் என சமூகவலைதளம் எதிலும் வெளியிடக்கூடாது என்பது தான் அது. முதலில் அதற்கு மணப்பெண் சம்மதித்துள்ளார்.

ஆனால், திருமணம் நடைபெற்றதும் தான் அளித்த வாக்குறுதியை மீறி தனது திருமணப் புகைப்படங்களை ஸ்னாப்சாட்டில் அவர் வெளியிட்டுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது கணவர், தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

திருமணமான இரண்டே மணி நேரத்தில் சமூகவலைதளத்தில் புகைப்படம் வெளியிட்டதால், மணமக்கள் விவாகரத்து வரை சென்றது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+