வாங்க கட்டிக்கலாம்... ‘ஃப்ரீ ஹக்ஸ்’ பேனரோடு நின்றிருந்த 2 துபாய் இளைஞர்கள் கைது
துபாய்: வருவோர், போவோரையெல்லாம் கட்டிப் பிடித்த ‘ஃப்ரீ ஹக்ஸ்' இயக்கத்தைச் சேர்ந்த இருவரை துபாய் போலீசார் கைது செய்துள்ளனர்.
பொதுவாக அறிமுகமில்லாத நபர்களை அவர்களது முதல் சந்திப்பில் கட்டிப் பிடித்து நட்பு பாராட்டும் வழக்கம் சில நாடுகளில் உள்ளது.
அந்த வகையில், கட்டிப் பிடிக் கலாச்சாரத்தை பிரபலப் படுத்துவதற்காக உருவாக்கப் பட்ட ‘ஃப்ரீ ஹக்ஸ்' இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள், கடந்த வாரம் துபாய் வீதிகளில் நின்று கொண்டு அவ்வழியே வருவோர், போவோரையெல்லாம் கட்டிப்பிடித்து களேபரம் செய்தார்கள் என்ற காரணத்திற்காக கைது செய்யப் பட்டுள்ளனர்.

கட்டிப்புடி இயக்கம்....
‘ஃப்ரீ ஹக்ஸ்' எனப்படும் கட்டிப்புடி இயக்கத்தின் நோக்கமே, முன்பின் அறிமுகமற்ற புதிய நபர்களை கட்டியணைத்து அவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கையை ஏற்படுத்துவதே ஆகும்.

நட்பு பாராட்டுதல்...
இந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் தற்போது உலகம் முழுவம் பரவி வாழ்ந்து வருகின்றனர். முக்கிய நகரங்களில் புதிய நபர்களை பார்க்கும்போது அவர்களின் அருகே சென்று மார்போடு ஆரத்தழுவி வாழ்த்துவது இவர்களின் வாடிக்கை.

சவுதியிலும்....
இஸ்லாமிய மத சம்பிரதாயங்களுக்கும், பழமைவாதத்துக்கும் பெயர் போன சவூதி அரேபியாவிலும் இவ்வியக்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.

ஃப்ரீ ஹக்ஸ்....
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், இவ்வியக்கத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் ரியாத் நகரில் உள்ள தஹிலா தெருவில் 'ஃப்ரீ ஹக்ஸ்' பேனர்களுடன் நின்றனர். அத்தோடு, அவ்வழியே சென்றவர்களை எல்லாம் அவர்கள் கட்டிப்பிடித்து நட்பு பாராட்டியுள்ளனர்.

கைது....
இளைஞர்கள் இருவர் இது போன்று பொது இடத்தில் அத்துமீறிச் செயல்படுவதாக தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவர்களைக் கைது செய்தனர்.

கருத்துப் போராட்டம்...
இந்த இளைஞர்களின் கைது மூலம் தற்போது சவூதியில் இருவிதமான கருத்துப் போராட்டம் தொடங்கியுள்ளது. அவர்களில் சிலர் இளைஞர்களுக்கு ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பாகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இதெல்லாம் ஒரு மேட்டரா பாஸ்....
அதாவது, அவர்கள் இலவசமாக கட்டிப்பிடித்து நட்புத் தானே பாராட்டினார்கள், போதைப் பொருளாக் கொடுத்தார்கள் என ஒரு சாராரும், இன்றைக்கு கட்டிப்பிடிப்பவர்கள் நாளைக்கு முத்தம் கொடுப்பார்கள் இதை அப்படியே ஊக்குவித்தால் அவர்கள் எல்லை மீறுவது உறுதி என எதிர்ப்பு தெரிவித்து ஒரு சாராரும் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications