சவுதி: கணவரின் வாட்ஸ்-அப் மெசேஜுக்கு பதிலளிக்காமல் நண்பருடன் சாட் செய்த மனைவிக்கு விவாகரத்து!
மனாமா: வாட்ஸ் அப்பில் கணவன் மெசேஜுக்கு பதில் அளிக்காமல் நண்பருடன் சாட் செய்து கொண்டிருந்த மனைவியை விவாகரத்து செய்துள்ளார் சவுதி கணவன்.
சவுதி நாட்டை சேர்ந்த 30 வயது ஆணுக்கு சில வருடங்கள் முன்புதான் திருமணம் முடிந்தது. ஆனால் வந்த மனைவியோ ஸ்மார்ட் போனே கதியாக இருப்பவராக இருந்துள்ளார். கணவன் வீட்டுக்கு வந்தாலும் அவருடன் நேரத்தை செலவிடாமல் போனையே வெறித்து பார்த்தபடி நண்பர்களின் மெசேஜுக்காக காத்திருப்பது அவரது வழக்கமாம். குறிப்பாக வாட்ஸ் அப்பே கதி என்று இருந்துள்ளார்.

இதனால் குழந்தைகளையும் சரிவர பேணுவது கிடையாதாம். கணவன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஸ்மார்ட் போன் அடிமைத்தனத்தில் இருந்து, மனைவி மீளுவதாக இல்லை. சமீபத்தில் ஒருநாள் அலுவலகத்தில் இருந்தபடி மனைவியின் செல்போனுக்கு போன் செய்துள்ளார் அந்த கணவன். ஆனால் மனைவி போனை எடுக்கவில்லை.
இதன்பிறகு வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜையும் அனுப்பியுள்ளார். அதற்கும் பதில் வரவில்லை. குழப்பமடைந்த அந்த நபர் உடனடியாக வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால் வீட்டில் மனைவி ஹாயாக டிவி பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
தனது மெசேஜுக்கு ஏன் பதில் தரவில்லை, என்று மனைவியிடம் கேட்டதற்கு, எனது நண்பர் ஒருவருடன் சாட் செய்து கொண்டிருந்ததால் உங்கள் மெசேஜை கவனிக்கவில்லை என்று மனைவி தெரிவித்துள்ளார். கோபத்தின் உச்சிக்கே சென்ற அந்த கணவன், மனைவியை டைவர்ஸ் செய்ய கோர்ட்டில் விண்ணப்பித்தார். இதே காரணத்தை கோர்ட்டை ஏற்க செய்து டைவர்சும் பெற்றுவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications