ரியாத்: இரண்டாம் திருமணம் செய்த கணவன்- சுட்டுக் கொன்ற மனைவி
ரியாத்: கணவன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என அவரை சுட்டுக் கொன்றுள்ளார் சவுதிப் பெண் ஒருவர்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் ஆண்கள் பலதார திருமணங்களை செய்து கொள்ள அந்நாட்டின் சட்டதிட்டங்கள் அனுமதியளித்துள்ளது.
இந்நிலையில், தனது எதிர்ப்பையும் மீறி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட கணவனை முதல் மனைவி துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நினைக்கும் அந்நாட்டின் ஆண்வர்க்கத்தை ஒன்றுக்கு இருமுறை சிந்திக்க வைத்துள்ளது.
சவுதியின் வடக்கு எல்லைப் பிரதேசமான அல்-ஜவுஃப் பகுதியை சேர்ந்த ஒருவர், தனது முதல் மனைவியின் விருப்பத்துக்கு மாறாக சில தினங்களுக்கு முன்னர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இது தெரிய வந்ததும் ஆவேசமடைந்த முதல் மனைவி, உல்லாச வாழ்க்கைக்கு திட்டமிட்டிருந்த கணவனையும், அவரது புது மனைவியையும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.
இதில் உடலின் பல பகுதிகளில் குண்டு பாய்ந்த கணவன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியாகினார். அவரது இரண்டாவது மனைவி குண்டு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications