முன்னாள் கணவரை முட்டாள் பிசாசு என்று வாட்ஸ்அப்பில் திட்டிய பெண்ணுக்கு 3 நாள் சிறை
சவுதியில் விவகரத்தான கணவனை வாட்ஸ்அப்பில் திட்டிய மனைவியை போலீசில் புகார் கொடுத்து சிறையில் தள்ளியுள்ளார் முன்னாள் கணவர்.
சவுதி: கணவரை அடி அடி என்று அடித்து வடிவேலுவை கோவை சரளா துவைப்பது போல துவைத்து காயப்போடுகிறார்கள். அத்தனை அடியையும் வாங்கும் கணவர்கள் அமைதியாக அடுத்த வேலையை பார்க்க கிளம்பிவிடுகிறார்கள். இந்த சந்தோசமெல்லாம் நம் ஊரில்தான். சவுதியில் விவகரத்தான கணவனை வாட்ஸ்அப்பில் திட்டிய மனைவியை போலீசில் புகார் கொடுத்து சிறையில் தள்ளியுள்ளார் முன்னாள் கணவர்.
நீதிமன்றங்கள் பல விநோதமான வழக்குகளை சந்தித்துள்ளன. அப்படி ஒரு வழக்குதான் ஜெட்டா நகரில் உள்ள மேற்கு சவுதி நீதிமன்றத்திற்கு வந்தது. இளைஞர் ஒருவர் வாட்ஸ் அப் மெசேஜ் உடன் கோர்ட் படியேறி வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த நபரின் முன்னாள் மனைவிக்கும் அவருக்கும் ஏற்பட்ட பிரச்சினைதான். கோர்ட் படியேற காரணமாக அமைந்துள்ளது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்யப்பட்ட முன்னாள் மனைவி கடுமையாக திட்டி வாட்ஸ் அப் செய்துள்ளார். அதனை படிக்க படிக்க அவருக்கு மன உளைச்சல் அதிகமாகி விட்டது. அந்த பெண் பயன்படுத்தியிருந்த கடுமையான வார்த்தைகள் அந்த நபரை தூங்க விடாமல் செய்தன. வார்த்தைக்கு வார்த்தை 'முட்டாள்' என்றும் 'பிசாசு' என்றும் மெசேஜ் செய்திருந்தார்.
இவளை ஏதாவது செய்தாக வேண்டுமே என்று யோசித்த அவர், முன்னாள் மனைவி மீது வழக்குக் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, பிரிந்து சென்ற கணவனை கடுமையாக திட்டிய மனைவிக்கு மூன்று நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இனிமே இது போல திட்டி மெசேஜ் அனுப்பக் கூடாது என்றும் அந்த பெண்ணை நீதிபதி எச்சரித்திருக்கிறார்.
நம் ஊரில் முன்னாள் கணவர்களோ... இந்நாள் கணவர்களோ யாராக இருந்தாலும் மனைவி கடுமையாக அடித்தால் கூட எதையும் தாங்கும் இதயமாக எதிர்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications