வங்கதேசத்துக்காரர்கள் ரொம்ப 'காஸ்ட்லி': வேலைக்கு எடுப்பதை நிறுத்தும் சவுதி
ரியாத்: அதிகம் செலவு செய்து வங்கதேச ஊழியர்களை சவுதிக்கு அழைத்து வருவதை விட அவர்களை வேலைக்கு எடுப்பதை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களை வேலைக்கு எடுப்பதை நிறுத்த சவுதி அரேபியாவைச் சேர்ந்த பணியமர்த்தும் அலுவலகங்கள் முடிவு செய்துள்ளன. வங்கதேசத்தில் இருந்து சவுதிக்கு வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. மேலும் அவர்களை சவுதிக்கு அழைத்து வரும் செலவு அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆட்களை வேலைக்கு எடுக்கும் நிபுணர் கூறுகையில்,
வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு சிலர் தான் வேலை கேட்கிறார்கள். அவர்களை சவுதிக்கு அழைத்து வரும் செலவு 80 சதவீதம் அதிகரித்துள்ளது. வங்கதேசத்தைச் சேர்ந்த 5 லட்சம் பேர் சவுதிக்கு வேலைக்கு வருவார்கள் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்ததுபடி நடக்கவில்லை.
தற்போது வாரத்திற்கு 4 முதல் 5 ஆட்கள் தான் சவுதிக்கு வேலைக்கு வருகிறார்கள். வங்கதேசத்தில் பயிற்சி மையங்கள் வேறு குறைவு. பயிற்சி காலம் 4 வாரங்கள் ஆகும். இதனால் தாமதம் ஏற்பட்டு அவர்கள் சவுதிக்கு தாமதாக வருவதால் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications