119 நாட்டு மக்களை தேசியகீதம் பாடவைத்து கின்னஸில் இடம்பிடித்த துபாய் ஸ்கூல்!
துபாய்: துபாயில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் நோக்கத்தில் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில், 119 நாடுகளை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இணைந்து பாடும் தேசிய கீத நிகழ்ச்சி துபாயில் இயங்கி வரும் இந்தியப் பள்ளியான ஜெம்ஸ் பள்ளியில் இன்று நடைபெற்றது.
உலக நாடுகளில் உள்ள மக்களுக்கு துபாய் வழங்கிவரும் வாய்ப்புகளுக்கு நன்றி கூறும் வகையில் துபாயின் 43 ஆவது தேசிய தினமான இன்று இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த சாதனை நிகழ்ச்சியில் துபாய் உள்பட 119 நாடுகளை சேர்ந்த ஜெம்ஸ் பள்ளியின் மாணவ-மாணவிகள், அவர்களது பெற்றோர்கள், அப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் என ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்று ஒரே நேரத்தில், ஒரே குரலில் துபாய் நாட்டின் தேசிய கீதத்தை பாடி மெய்சிலிர்க்க வைத்தனர்.
இந்த காட்சியை லைவ் ஆக அரபு நாடுகளில் உள்ள இதர ஜெம்ஸ் பள்ளிகளிலும் கண்ட மாணவ-மாணவிகள் பரவசத்துடன் கை தட்டி ரசித்தனர். மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கான கின்னஸ் நிறுவனத்தின் பிரதிநிதியாக உள்ள சமீர் கல்லவுஃப் அங்கீகரித்து, முந்தைய சாதனைகளை இன்று இந்த மாணவர்கள் முறியடித்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
துபாய் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் 40 கிளைகளை கொண்டுள்ள ஜெம்ஸ் பள்ளி இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த கே.எஸ்.வர்க்கி மற்றும் அவரது மனைவி மரியம்மா ஆகியோரின் நிர்வாகத்தில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications