கிரெடிட் கார்டை பயன் படுத்தியதற்காக கண்டித்த தாய்... மனமுடைந்த 13 வயது சிறுவன் தற்கொலை
நியூயார்க்: அமெரிக்காவில் கிரிடிட் கார்டு மூலம் 420 டாலர் மதிப்பிலான விளையாட்டுச் சாதனங்களை வாங்கியதற்காக அம்மா கண்டித்ததால், 13 வயது சிறுவன் ஒருவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
அமெரிக்காவில் வசித்து வந்த 13 வயது பள்ளி மாணவன் ஹென்றி. இவன் கடந்தாண்டு நவம்பர் மாதம் தனது தாயாரின் கிரெட்டிட் கார்டை பயன்படுத்தி, ஆன்லைனில் சில விளையாட்டு சாதனங்களை வாங்கியுள்ளான். இதற்காக அவன் செலவழித்த தொகை 420 டாலர் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் இருபத்தாராயிரம் ரூபாய்.
மகனின் இந்தச் செயல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் அவனது தாயாருக்குத் தெரிய வந்துள்ளது. இதனால், அவர் ஹென்றியைக் கண்டித்துள்ளார். இதனால் மிகவும் வருத்தத்தில் இருந்துள்ளான் ஹென்றி. இதற்கிடையே நேற்று முந்தினம் மாலை தன் நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்த போதும் ஹென்றியைக் கணித்துள்ளார் அவனது தாயார்.
இதனால் மனமுடைந்த ஹென்ரி தனது அரையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளான். தற்கொலைக்கு 15 நிமிடங்களுக்கு முன் பேஸ் புக்கில் நான் சாகப்போகிறேன் என்று செய்தி வெளியிட்டுள்ளான் ஹென்றி.
சிறுவனின் இறப்பு குறித்து அவனது தாயார் தெரிவித்ததாவது :-
கடந்த வருடம் நவம்பர் 25-ந்தேதி கிரடிட் கார்ட் வாங்கினேன் எனக்கு தெரியாமலேயே எனது கிரடிட் கார்டு அட்டையை எனது மகன் எடுத்துள்ளான். கிரடிட் கார்ட்டை பயன்படுத்தி 420 டாலர்கள் விளையாட்டிற்காக ஆன் லைனில் பர்ச்சஸ் செய்துள்ளான். இந்த செய்தி சமீபத்தில் தான் எனக்கு தெரியவந்தது. இதனை நான் வன்மையாக கண்டித்தேன், அவன் இவ்வளவு பணத்தை செலவு செய்தது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் எனது மகன் நேற்று மாலை 4.20 மணி அளவில் நண்பர்களுடன் பேசிகொண்டிருந்தான், பின்னர் 5 மணிக்கு அழைத்தபோது அவன் வர மறுத்துவிட்டான் அவனது அக்கா மாடிக்கு சென்று அழைத்தபோது அவன் வர மறுத்துவிட்டான் பின்னர் 6.30 மணி அளவில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது மிகவும் அதிர்சியை அளிக்கிறது' என கண்ணீரோடு தெரிவித்துள்ளார் அவனது தாயார்.
ஹென்றி தற்கொலை செய்துகொள்வதை அவனது அக்கா நேரில் பார்த்துள்ளார். அவர் அளித்த தகவலின் பேரிலேயே விரைந்து வந்த அவனது பெற்றோர் சிறுவனை அருகில் உள்ள மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், மருத்துவனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications