சபாஷ் சாம்... 95 கிலோ கெளுத்தி ,மீனைப் பிடித்து 14 வயது சிறுவன் சாதனை!

Subscribe to Oneindia Tamil

எப்ரோ: ஸ்பெயினில் 14 வயதான சிறுவன் ஒருவன் 95 கிலோ எடையுள்ள கெளுத்தி மீனை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

ஸ்பெயினில் உள்ள உயர் நிலைப் பள்ளி ஒன்றில் படிக்கும் 14 வயது சிறுவன் சாம்.

இவர் மீன் பிடிப்பதில் அதீத ஆர்வமுள்ளவர். அடிக்கடி தந்தையுடன் கடலுக்குச் சென்றுவிடுவார்.

Schoolboy, 14, snares monster 15 stone catfish after half-hour struggle to land it during holiday in Spain....

எப்ரோ ஆற்றில் மீன்பிடிப்பு:

கிறிஸ்துமஸ் விடுமுறை தினமான நேற்று தன் தந்தை பீட்டருடன் காட்டலோனியாவில் உள்ள எப்ரோ ஆற்றில் மீன் பிடிப்பதற்காகச் சென்றார் சாம்.

95 கிலோ எடை மீன்:

திரும்பி வந்தபோது பார்த்தால் 95 கிலோ எடை கொண்ட பிரம்மாண்டமான கெளுத்தி மீனோடு கரைக்குத் திரும்பினான். சாமின் இந்த சாகசச் செயலை அப்பகுதி மக்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.

உஷாரான கெளுத்தி மீன்:

இந்த பெருமை அவ்வளவு எளிதாக ஒன்றும் சாமுக்கு கிடைத்து விடவில்லை. சாம் தன்னை வேட்டையாட வந்திருப்பதை அறிந்து உஷாரான மீன் 100 மீட்டர் ஆழத்திற்கு உள்ளே போய்விட்டது.

எட்டடி நீளமுள்ள மீனாம்:

35 நிமிடப் போராட்டத்திற்குப் பின்னரே எட்டடி நீளமுள்ள இந்த பெரிய கெளுத்தி சாமுக்கு கிடைத்தது.

நீந்தி வந்த கெளுத்தி:

அதைப் பிடித்ததைவிட தன் சிறிய படகில் அதை ஏற்ற முடியாததால் அதை தன் படகோடு சேர்ந்து நீந்தி வருமாறு செய்து புத்திசாலித்தனமாக அதைக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தற்கு நிறைய பேர் பாராட்டு தெரிவித்தனர்.

புகைப்படம் மட்டுமே:

இதற்காக பாரம்பரிய முறையில் கௌரவிக்கப்பட்ட சாம், தன்னுடைய தனிப்பட்ட சாதனைக்காக அந்த மீனோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு மீண்டும் அதை ஆற்றிலேயே விட்டு விட்டான்.

மூன்றாவது பயணம்:

எப்ரோவில் பிரம்மாண்டமான கெளுத்தி மீனுக்கான தேடலில் சாமுக்கு இது மூன்றாவது பயணம் என்பதும், சென்ற வருட விடுமுறையில் 60 கிலோ எடையுள்ள கெளுத்தி மீனைப் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+