மனிதர்கள் இதுவரை பார்த்திராத நிறம் கண்டுபிடிப்பு.. அசத்தி காட்டிய விஞ்ஞானிகள்! என்ன நிறம்னு பாருங்க
நியூயார்க்: மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும், லேசர் உதவியால் மட்டுமே இதை பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கலிபோர்னியா பல்கலைக்ககழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் இந்த சாதனையை படைத்திருக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், "இந்த ஒளியை லேசர் மூலம் மட்டுமே பார்க்க முடியும். சாதாரணமாக வெறும் கண்களால் பார்க்க முடியாது. விஞ்ஞானிகள் சிலரின் கண்களில் லேசர் ஒளியை துல்லியமாக செலுத்தி, கண்களுக்கு பின் உள்ள 'கோன்' எனும் நிறம் உணரும் செல்களை தூண்டுவதன் மூலம் இந்த ஒளியை பார்க்க முடியும்.
இயற்கையில் இப்படியான ஒளியை பார்க்கவே முடியாது. லேசர் உதவி மூலம் இந்த ஒளியை பார்த்தவர்கள், நீலம்-பச்சை கலந்த நிறத்தில் அந்த ஒளி இருந்ததாக கூறுகின்றனர். ஆனால் வழக்கமான நீலம் பச்சை நிறத்தை போல் அல்லாமல் இது வித்தியாசமாக இருந்திருக்கிறது என கூறியிருக்கிறார்கள். மனிதர்கள் பார்க்காத நிறத்தை நாங்கள் உருவாக்குவோம் என்று நினைத்திருந்தோம். ஆனால் மூளை அதை எப்படி புரிந்துக்கொள்ளும் என்று எங்களுக்கு தெரியாமல் இருந்தது. இதற்கு நாங்கள் ஓலோ (olo) என பெயரிட்டிருக்கிறோம்.
இந்த நிறம் தனிச்சிறப்புமிக்கது. இதனை மொபைல் டிஸ்பிளேவில், கம்ப்யூட்டர் மானிட்டரில் பார்க்க முடியாது. லேசர் மூலம் மட்முமே உணர முடியும். மனித கண்கள் ஒரு பொருளை பார்த்து அது இந்த நிறத்தில்தான் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க
- L (Long wavelength) - சிவப்பு
- M (Medium wavelength) - பச்சை
- S (Short wavelength) - நீலம்
எனும் அமைப்பை பயன்படுத்துகிறது. சூரிய ஒளியோ, அல்லது லைட் வெளிச்சமோ ஒரு பொருளின் மீது பட்டு எதிரொளிக்கும்போதுதான் அது எந்த நிறத்தில் இருக்கிறது என்பதை நாம் தெரிந்துக்கொள்கிறோம். நாங்கள் எங்கள் ஆய்வில் கண்ணின் M அமைப்பை மட்டுமே செயல்படுத்தினோம். இதன் மூலம் புதிய ஒளி உருவாகியுள்ளது.
இற்கையாக நம்மால் ஒரு அமைப்பை மட்டும் தூண்ட முடியாது. 3 அமைப்புகளும் சேர்ந்துதான் செயல்படும். இந்த M அமைப்பை மட்டும் செயல்பட வைக்க நாங்கள் லேசர் ஒளியை பயன்படுத்தினோம். இதற்கான பெயர் olo கூட பைனரி அமைப்பிலிருந்துதான் வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, L cone = 0, M cone = 1, S cone = 0. நாம் நடுவில் உள்ள M கோனை மட்டும் செயல்படுத்தியிருக்கிறோம். எனவேதான இதன் பெயர் olo என வைக்கப்பட்டிருக்கிறது" என்று கூறுகின்றனர். என்ன மக்களே நீங்களும் புதிய நிறத்தை பார்க்க ரெடியா?
-
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications