”கீரை விதைப்போம் கீரை விதைப்போம் செவ்வாய் கிரகத்தில் கீரை விதைப்போம்”!
லண்டன்: செவ்வாய் கிரகத்தில் லெட்டூஸ் எனப்படும் இலைக் கீரையை வளர்க்க விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனராம்.
மேலும் 2025 ஆம் ஆண்டு வாக்கில் அங்கு மனிதனை குடியமர்த்தவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாம்.
இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு இந்தத் திட்டத்தைத் தீட்டியுள்ளது.

ஆய்வுக் குழு முடிவு:
இந்தத் திட்டத்தை முன் வைத்திருப்பது செளதாம்ப்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவர் குழுவாகும்.
பசுமை இல்லம்:
கீரை விதைகள், தண்ணீர், சத்துப் பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்குத் தேவையான பிற விஷயங்களுடன் செவ்வாய் கிரகத்தில் ஒரு பசுமை இல்லத்தை இந்தக் குழுவ நிறுவவுள்ளது.
உணவு தேவை:
#LettuceOnMars என்ற பெயரில் இந்தத் திட்டத்தை இவர்கள் தொடங்கவுள்ளனர். இதுகுறித்து வி்ஞ்ஞானிகள் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவரான சுசன்னா லுகரோட்டி கூறுகையில், "ஒரு கிரகத்தில் உயிரினங்கள் வாழ வேண்டும் என்றால் முதலில் உணவு தேவை.
மனிதனின் வீடு:
எனவேதான் இதைச் செய்ய திட்டமிட்டுள்ளோம். முதலில் உணவுப் பொருட்களை ஏற்பாடு செய்து விட்டு பின்னர் மனிதனை அங்கு குடியமர்த்தத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
மார்ஸ் ஒன் விண்கலம்:
இந்தத் திட்டத்திற்கு அரசின் அனுமதி கிடைத்தவுடன், 2018 ஆம் ஆண்டு வாக்கில் செவ்வாய் கிரகத்திற்கு கீரை விதைகள் அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் மார்ஸ் ஒன் விண்கலத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக 2025 ஆம் ஆண்டு மனிதக் குடியேற்றம் தொடங்கும்.
மின்சார உற்பத்தி:
மார்ஸ் ஒன் விண்கலமானது 2025 ஆம் ஆண்டு அங்கு சென்றதும், மின்சார உற்பத்தியை தொடங்கும். மேலும் 21 டிகிரி செல்சியஸ் முதல் 24 டிகிரி செல்சியஸ் வரையிலான தட்பவெப்பத்தையும் அது கொடுக்கும்.
மண் இல்லாமல் வளர்ப்பு:
மேலும் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்திலிருந்து கார்பன் டை ஆக்சைடு வாயு பிரித்தெடுக்கப்படும். செவ்வாய் கிரகத்தில் வளர்க்கப்படும் கீரையானது, மண் இல்லாமலேயே வளர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications