மாயமான விமானம் கடலுக்குள் விழுந்து தரைதட்டியிருக்கும்: சீன ஆராய்ச்சியாளர்கள்
பெய்ஜிங்: மலேசியா மற்றும் வியட்நாம் இடையே உள்ள கடலின் அடிப்பகுதியில் அதிர்வு ஏற்பட்டதை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த 8ம் தேதி விமானம் எம்.ஹெச். 370 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்கு கிளம்பியது. அந்த விமானம் தென் சீன கடல் பகுதியில் மாயமானது என்று கூறப்பட்டது. இதற்கிடையே விமானத்தை யாராவது கடத்தி வைத்திருக்கலாம் என்று அமெரிக்க விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விமானம் மாயமான சனிக்கிழமை நள்ளிரவு 2.55 மணிக்கு மலேசியா மற்றும் வியட்நாம் மத்தியில் உள்ள கடலின் அடிப்பகுதியில் அதிர்வு ஏற்பட்டதை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
விமானம் கடலில் விழுந்து தரை தட்டியிருக்கலாம். அதனால் தான் கடலின் அடியில் அந்த அதிர்வு ஏற்பட்டிருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விமானம் மாயமானது குறித்து தினமும் பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications