ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ‘அனோரா’.. விருதை பாலியல் தொழிலாளிகளுக்கு அர்ப்பணித்த இயக்குநர் ஷான் பேக்கர்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: 5 ஆஸ்கர் விருதுகளை வென்ற 'அனோரா' திரைப்படத்தின் இயக்குநர் ஷான் பேக்கர், தனக்கு கிடைத்த விருதை பாலியல் தொழிலாளிகளுக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார்.
97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலக அளவில் பல நாடுகளில் இருந்தும் நடிகர், நடிகைகள் மற்றும் திரைத்துறை கலைஞர்கள் ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியை ஏமி விருது வென்ற தொலைக்காட்சி தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகருமான கெனைன் ஓ பிரைன் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஒவ்வொரு பிரிவுகளாக ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சிறந்த அசல் திரைக்கதை, சிறந்த எடிட்டிங், சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த நடிகை ஆகிய பிரிவுகளில் ஆஸ்கர் வென்றுள்ளது அனோரா திரைப்படம். இந்தப் படத்தின் மூலமாக 3 ஆஸ்கர் விருதுகளை அள்ளியுள்ளார் இப்படத்தின் இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும், எடிட்டருமான ஷான் பேக்கர்.
'அனோரா' திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார் மிக்கி மேடிசன். சிறந்த படத்திற்கான அஸ்கர் விருதை தட்டித் தூக்கியது அனோரா திரைப்படம்.
பாலியல் தொழிலாளிகளுக்கு நன்றி சொன்ன ஷான் பேக்கர்
அனோரா படத்தின் இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும், எடிட்டருமான ஷான் பேக்கர், இந்த ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டு, பாலியல் தொழிலாளர்கள் சமூகத்தினரை கௌரவிக்கும் வகையில் நன்றி உரையை நிகழ்த்தினார்.
"பாலியல் தொழிலாளர் சமூகத்திற்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்கள் தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். பல ஆண்டுகளாக அவர்கள் என்னுடன் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு எனது மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன். நன்றி. இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!" என்று தெரிவித்தார்.
அனோரா திரைப்படம்
அனோரா திரைப்படம், ஒரு பாலியல் தொழிலாளி காதல் வசப்படும் கதையை விறுவிறுப்பாகவும், அழகியலோடும் கூறும் திரைப்படம். ஆனி என்கிற அனோரா, ஒரு பாரில் ஸ்ட்ரிப் டான்ஸராக பணி புரிபவள். பாலியல் தொழிலாளியும் கூட. ஆனியின் அழகும், இளமைத் துடிப்பும், அவளது பேச்சும் வாடிக்கையாளர்களை ஈர்த்து அந்த பாரின் ஸ்டார் கேர்ள் ஆக இருக்கிறாள். வான்யா என்ற ரஷ்ய இளைஞன், அனோரா மீது காதல் கொள்கிறான்.
ஆனியை ஒரு பார் டான்ஸராக அல்லாமல் தனது காதலியாகவே கருதுகிறான். ஒரு வாரம் காதலர்களைப் போலவே இருவரும் வாழ்ந்து கழிக்கிறார்கள். ஒருகட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கிறான் வான்யா. முதலில் இதனை நம்ப மறுக்கும் அனோரா பின்னர் வான்யாவின் காதலை ஏற்கிறாள். மணம் செய்து கொள்கிறாள்.

ரஷ்யாவில் இருக்கும் வான்யாவின் வசதியான பெற்றோருக்கு தங்கள் மகன் ஒரு பாலியல் தொழிலாளியை திருமணம் செய்துள்ளான் என்பது பேரதிர்ச்சியாக இருக்கவே, மிகுந்த கோபத்துடன் உடனடியாக அந்தத் திருமணத்தை ரத்து செய்துவிடும்படி பாதிரியார் டொரஸிடம் கூறுகிறார்கள்.
அதன்பின்னர் என்ன நடக்கிறது, அனோராவின் வாழ்க்கை என்ன ஆனது? என்பதெல்லாம் இப்படத்தின் பிற்பகுதி. எடிட்டிங் இந்தப் படத்துக்கு மிகப் பெரிய பலம். ஒளிப்பதிவும், துள்ளலான இசையும் படத்துக்குப் பக்கபலமாக இருக்கின்றன. ஏற்கனவே பல விருதுகளை வென்றுள்ள அனோரா திரைப்படத்திற்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார் இப்படத்தின் இயக்குநர் ஷான் பேக்கர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications