இதெல்லாம் ரொம்ப ஓவரப்பா.. "இடியட்"னு தேடினால் என்ன வருதுன்னு பாருங்க!
கூகுள் இமேஜில் இடியட்டுனு தேடினா அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் படம் வருகிறது.
Recommended Video

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஆகாதவர்கள் சிலர் இடியட் என்ற வார்த்தையை டிரம்பின் புகைப்படத்துடன் இணைந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மக்களுக்கு எதிராக பல்வேறு திட்டங்களையும் விதிகளையும் செயல்படுத்துவதால் அந்நாட்டு மக்களுக்கு அவரை துளியும் பிடிக்கவில்லை. இதனால் அவரை அவமானப்படுத்த எப்படா சான்ஸ் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்தனர்.
டிரம்பின் கொள்கைக்கு எதிரானவர்கள் அவரை முட்டாள் என இந்த உலகுக்கு உணர்த்த நினைத்தனர். அதன்படி டிரம்பின் போட்டோக்களை இடியட் என்ற வார்த்தையுடன் இணைத்தனர்.

புதிதல்ல
தற்போது கூகுள் இமேஜில் சென்று இடியட் என்ற டைப் செய்தால் நவரசங்களை வெளிப்படுத்தும் டிரம்பின் ஏராளமான புகைப்படங்கள் வருகின்றன. இதன் மூலம் அவர்கள் டிரம்பை எதிர்த்து இணையதளத்திலும் ஒரு போராட்டத்தை நடத்துவது தெரிகிறது. இது ஒன்றும் புதிதல்ல.

டிரென்ட்
இதுபோல் இந்தியாவிலும் எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக இதுபோன்ற பிரசாரத்தை செய்தன. அதில் மோடி என்றால் அளவுக்கு மீறி கதை அளந்துவிடுவது என்று பொருள்படும்படி ஃபேகு (Feku)என்ற வார்த்தையை இணைந்திருந்தனர். இது ஏப்ரல் மாதம் மிகவும் டிரென்டானது.

மே மாதம்
அதுபோல் மோடி மீதான விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விமர்சனம் செய்ய கூகுளில் பாப்பு அல்லது பப்பு (Pappu)என்ற வார்த்தையை டைப் செய்தால் குழந்தை, சின்னப்புள்ள என்ற பொருள்படும்படி இணைந்திருந்தனர். இது கடந்த மே மாதம் மிகவும் பிரபலமானது.

கூகுள் விளக்கம்
மோடி, ராகுல் வரிசையில் டிரம்பையும் விட்டு வைக்காதது குறித்து கூகுள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில் தனிநபர்கள் ஒருவர் மீதான விருப்பு, வெறுப்புகளை உணர்த்த இதுபோன்று காரியத்தை செய்கின்றனர். இந்த கோளாறுகள் விரைவில் சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications