மாயமான மலேசிய விமான தேடலில் மேலும் பிரச்சனை: சோனார் கருவி மாயம்
பெர்த்: தெற்கு இந்திய பெருங்கடலில் நீருக்கு அடியில் மாயமான மலேசிய விமானத்தை தேட பயன்படுத்தப்பட்டு வந்த சோனார் கருவி மாயமாகிவிட்டது என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மலேசிய தலைநகரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பியது. விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது.

விமானம் விழுந்ததாக கூறப்படும் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியா தலைமையில் தேடுதல் பணி நடந்து வருகிறது. 2 ஆண்டுகளாக தேடியும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில் தாய்லாந்தில் கரை ஒதுங்கிய விமான பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அது மலேசிய விமான பாகமாக இருக்க வாய்ப்பு இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தெற்கு இந்திய பெருங்கடலில் நீருக்கு அடியில் விமான பாகங்களை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த டோஃபிஷ் என்ற சோனார் கருவி மாயமாகியுள்ளது. கடலுக்கு அடியில் இருந்த மணல் மேட்டில் மோதி கருவியின் கேபிள் வயர் அறுந்துவிட்டது. இதனால் கருவி தற்போது கடலுக்கு அடியில் சென்றுவிட்டது.
அந்த கருவி நிச்சயம் தேடிக் கண்டுபிடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications