பறையிசை முழக்கத்துடன் தைப்பூசம் கொண்டாடிய சியாட்டல் தமிழர்கள்!
சியாட்டல்(யு.எஸ்): அமெரிக்க வடமேற்கு கரையோர சியாட்டல் நகரில் ரெட்மண்ட் மற்றும் பாத்தல் கோவில்களில் தமிழர்களின் பறையிசை முழங்க தைப்பூசம் கொண்டாடப்பட்டது.
சியாட்டல் கிராமியக் கலைக்குழு (Seattle Tamil Arts of Rhythm - STAR) என்ற பெயரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற லாப நோக்கமற்ற அமைப்பு முதலில் பறையிசையை அங்கே அரங்கேற்றியுள்ளனர்.

STAR கலைக்குழு என அழைக்கப்படும் இந்த குழுவினர் ஒரே நாளில் ரெட்மண்ட் வேதா கோவிலிலும் பாத்தல் இந்து கோவிலிலும் நடைபெற்ற தைப் பூச நிகழ்ச்சியில் பறை இசைத்து நடனமாடினர். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை காவடி சுமந்து வர, உடன் பறையிசையும் கலந்து வந்த போது அங்கே பக்தி பரவசத்துடன் தமிழ் மணமும் ஒருங்கே கலந்து வீசியது எனலாம்.

அமெரிக்காவில் பறையிசையின் முன்னோடியாக விளங்கும் செயிண்ட் லூயிஸ் நகர ‘அமெரிக்கன் பறை இசைக் குழுவினருடன்' தொடர்பு கொண்டு பல யுத்திகளை தெரிந்து கொண்டதாக கூறுகிறார்கள். மேலும் பல யூ டியூப் வீடியோக்களைப் பார்த்து சுயமாகவே இக்குழுவினர் பறையிசையை பயின்றுள்ளனர்.
பறையிசை மட்டுமல்லாமல் , தமிழர்களின் மற்ற கலைகளான ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை என அனைத்து வித கலைகளையும் அமெரிக்க மண்ணில் அரங்கேற்றுவதே தங்கள் இலக்கு என்று STAR கலைக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
-இர தினகர்
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications