நைஜீரியா: விபசார விடுதியில் குண்டு வெடித்ததில் 11 பேர் பலி - 28 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
அபுஜா: நைஜீரியாவில் விபச்சார விடுதி ஒன்றில் போகோ ஹரம் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர், 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வடக்கு நைஜீரியாவை இஸ்லாமியர்களுக்கான தனி நாடாக அறிவிக்கக்கோரி போகோஹாரம் தீவிரவாதிகள் நீண்ட நாட்களாகவே போராடி வருகின்றனர். சிறுமிகள் மற்றும் பெண்களைக் கடத்துவது, குண்டு வைத்து பொதுமக்களைக் கொல்வது என கோடூர செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வடக்கு நைஜீரியாவின் சிவப்பு விளக்கு பகுதியான பாயுசி சிட்டியில் விபசார விடுதிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள விபசார விடுதி ஒன்றில் நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் 11 பேர் உயிரிழந்தனர், 28 பேர் அடைந்தனர்.
இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு போகோஹாரம் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications