தோலில் ஊடுருவி நெளிந்த புழுக்கள்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தூய்மை பணியாளர்!
மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் தூய்மை பணியாளராக பணியாற்றிய ஒருவரின் தோலுக்கு அடியில் புழுக்கள் நெளியும் அரிய வகை நோய்க்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவர் 64 வயது முதியவர். இவர் அந்நாட்டில் தூய்மை பணியாளராக பணியாற்றியுள்ளார். இவர் கிராமபுறத்தில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களாக லேசான வயிற்றுப் போக்கும் அரிப்புத்தன்மையும் இருந்துள்ளது.
இவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்று அங்கு அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் அவர் ஒரு வித ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

புழுக்கள்
பொதுவாக இந்த புழுக்கள் வெப்பமண்டல மற்றும் துணை வெப்ப மண்டல காடுகளில் காணப்படும். இவை அசுத்தமான மணல் பரப்பிலிருந்து மனித தோலுக்கு பரவும் தன்மை கொண்டது. மருத்துவர்கள் அவருடைய தோலில் நெளியும் புழுக்களின் வடிவத்தை ஸ்கெட்ச் மூலம் வெளியே வரைந்துள்ளனர். தோலில் சிவப்பாக இருப்பதுதான் ரேஷஸ்கள்.

ஒட்டுண்ணிகள்
இந்த ஒட்டுண்ணிகள் உடலில் பரவத் தொடங்கினால் அவற்றின் அறிகுறிகள் தெரிய சில ஆண்டுகள் ஆகும். அந்த வகையில் இவருக்கு எப்போது ஒட்டுண்ணி பரவியது என தெரியவில்லை. அந்த நபருக்கு ஒட்டுண்ணிக்கு எதிரான மருந்துகள் அவருக்கு கொடுக்கப்பட்டு அந்த மருந்துகளும் அவருக்கு சிறப்பாக செயலாற்றுகின்றன.

வயிற்றுப்போக்கு
இதனால் அவருக்கு இருந்த வயிற்றுப்போக்கும், ஆங்காங்கே சிவப்பாக இருத்தலும் குறைந்துவிட்டது. அந்த தூய்மை பணியாளருக்கு எப்படி இந்த தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் குறிப்பிட்ட தொழில்களை செய்யும் நபர்கள் இது போன்ற தொற்று பாதிப்பை சந்திக்கக் கூடும் என்கிறார்கள். முறையான சுகாதாரம் அவசியமாகிறது.

தூய்மை பணி
அனேகமாக அவருக்கு தூய்மை பணியின் போது அசுத்தமான குப்பையிலிருந்து அவருக்கு இந்த ஒட்டுண்ணி தொற்று பரவியிருக்கலாம் என தெரிகிறது. அந்த புழுக்கள் அவரது உடலில் ஆங்காங்கே நெளிந்தது. இதனால் அரிப்புத்தன்மை ஏற்பட்டு தோலில் சிவப்பு சிவப்பாக வீங்கும் தன்மை ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இந்த தகவலை நியூ இங்கிலாந்து ஜெர்னல் ஆப் மெடிசின் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தோலுக்குள் ஊடுருவும்
இந்த புழுக்கள் மனித தோலுக்குள் ஊடுருவி குடலை அடையும். அவை முதிர்ச்சி அடைந்தவுடன் குடலில் முட்டையை உற்பத்தி செய்யும். இந்த புழுக்கள் செப்சிஸ் நோயையும் உறுப்பு செயலிழப்பையும் ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள். சில சமயங்களில் கவனிக்காமல் விட்டால் உயிரிழப்பையும் ஏற்படுத்துமாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications