கண்ணில் பட்ட பெண்ணையெல்லாம் கட்டிப்பிடித்த நேபாள அமைச்சர் ராஜினாமா
காத்மாண்டு: நேபாள விவசாயத்துறை அமைச்சர் ஹரி பிரசாத் பரஜுலி ஒரு வழியாக தனது பதவியை ராஜினிமா செய்து விட்டார். கண்ணில் பட்ட பெண்களையெல்லாம் கட்டிப்பிடித்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியதைத் தொடர்ந்து இவர் பதவி விலகியுள்ளார்.
ஹரி பிரசாத் பரஜுலி, செவ்வாய்க்கிழமை நேபாளத்தில் நடந்த வருடாந்திர நெல் விதைக்கும் திருவிழாவில் கலந்து கொண்டார். அப்போது வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களிடம் போய் ஒவ்வொருவரையும் கட்டிப்பிடித்தார். பாட்டிகளைக் கூட அவர் விடவில்லை.

ஹரி பிரசாத்தின் செயலால் அப்பெண்கள் பெரும் தர்மசங்கடமாகிப் போனார்கள். இதுதொடர்பான புகைப்படங்களும் வீடியோ காட்சியும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹரி பிரசாத்தின் செயல் வக்கிரமமானது, பாலியல் கொடுமை இது என்றும் சர்ச்சைகள் வெடித்தன.
இதுகுறித்து பரஜுலி சார்ந்த ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சூர்ய தாப்பா கூறுகையில், அமைச்சரின் செயல் வரம்பு மீறியுது, அநாகரீகமானது. அவர் தனது எல்லையைக் கடந்திருக்கக் கூடாது.

பொதுமக்கள் மத்தியில் அவரது செயல் கண்டனத்தைக் கிளப்பியதால் தற்போது தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார் என்றார் தாப்பா.
ஹரியின் ராஜினாமாவை பிரதமர் சுஷில் கொய்ராலா உடனடியாக ஏற்றுக் கொண்டார்.
நேபாளத்தில் பெண்கள் பொது இடங்களில் இதுபோன்ற பாலியல் வக்கிரங்களுக்கு உள்ளாவது அதிகரித்து வருவதாக ஏற்கனவே ஒரு கவலை நேபாளத்தில் உள்ளது. இந்த நிலையில் அமைச்சரே இப்படி தாறுமாறாக கட்டி அணைத்து பரபரப்பைக் கிளப்பியது சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications