இவங்களைப் போய் திருடின்னு சொல்லிட்டாங்களே சரவணா....!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: கனடாவின் கியூபெக் நகரில் நர்சிங் படித்து வரும், தனது அழகால் பலரையும் வசீகரித்த, பிரபலமான ஒரு இளம் மாணவி மீது வீடு புகுந்து திருடியதாக போலீஸார் வழக்குப் போட்டுள்ளனர். இது கனடாவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அந்த இளம் மாணவியின் பெயர் ஸ்டெபானி பியூடாயின். இவர் தவிர மேலும் 3 இளம் பெண்கள் மீதும் போலீஸார் திருட்டுப் புகாரைப் பதிவு செய்துள்ளனர்.

ஸ்டெபானி மிகவும் கவர்ச்சிகரமானவர். முன்பு கருப்பு நிற பிகினி உடையில் அவர் படு கவர்ச்சிகரமாக தோன்றும் கவர்ச்சிப் புகைப்படங்களை கனடாவைச் சேர்ந்த இதழ் ஒன்று வெளியிட்டதைத் தொடர்ந்து கனடா முழுவதும் பிரபலமானார் ஸ்டெபானி. மேலும் இன்டர்நெட்டிலும் அந்தப் படங்கள் வைரல் போல பரவி புகழ் பெற்றார். ஆனால் அவர் ஒரு திருடி என்று வழக்குப் போடப்பட்டுள்ளதால் பரபரப்பாகியுள்ளது.

மொத்தம் 114 புகார்கள் ஸ்டெபானி மீது சுமத்தப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கியூபெக் நகரில் ஒரு வீடு கூட விடாமல் திருடியுள்ளார் ஸ்டெபானி என்கிறார்கள். சரமாரியாக திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார் இவர்.

Sexy nursing student charged in Canadian burglary spree is Internet’s new favorite hot crook

தனது கூட்டாளிகளுடன் இணைந்து 42 வீடுகளில் அவர் புகுந்து திருடியுள்ளாராம். விதம் விதமான பொருட்களை அவர் திருடியுள்ளார். இவருக்கு 21 வயதுதான் ஆகிறது.

இவரது புகைப்படம் குறித்து முன்பு பலரும் டிவிட்டரில் ஒரு நாள் ஸ்டெபானி எனது இதயத்தைத் திருடிக் கொண்டு போகப் போகிறார் என்று பலரும் கமெண்ட் போட்டிருந்தனர். ஆனால் ஸ்டெபானியோ பக்கா திருடியாக இருந்துள்ளது அம்பலமாகியுள்ளது.

உலகிலேயே மிகவும் கவர்ச்சிகரமான திருடி இவர்தான் என்று இங்கிலாந்தின் மிர்ரர் பத்திரிகை வர்ணித்துள்ளது.

ஸ்டெபானி கும்பலின் ஸ்டைலே அலாதியாக இருக்கிறது. அதாவது பூட்டிக் கிடக்கும் வீடுகளில்தான் இவர்கள் கைவரிசையைக் காட்டுவார்களாம். வீட்டின் பின்புற கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து விடுவார்களாம். மேலும் வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னல்களை உடைத்தும் உள்ளே நுழைந்து விடுவார்களாம்.

இவரது கூட்டாளிகள் இவரை விட சிறுசாக உள்ளனர். அவர்களுக்கு வயது 13, 15 மற்றும் 17 ஆகும். அவர்களது அடையாளம் தெரிவிக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+