சிரியா அகதிகள் முகாமில் பிறந்த ஐஎஸ்ஐஎஸ் பெண் தீவிரவாதியின் குழந்தை மரணம்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அகதிகள் முகாமில் பிறந்த பெண் தீவிரவாதியின் குழந்தை மரணம்!

    லண்டன்: சிரியாவில் உள்ள அகதிகள் முகாமில், இங்கிலாந்து ஐஎஸ்ஐஎஸ் பெண் தீவிரவாதி ஷமிமா பேகமுக்கு பிறந்த குழந்தை இறந்து விட்டதாக இங்கிலாந்து அறிவித்துள்ளது.

    இந்த செய்தி தொடர்பாக முதலில் குழப்பமான தகவல்கள் வெளியாகின. ஆனால் சிரிய நாட்டு ராணுவம் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.

    இறந்த குழந்தையின் பெயர் ஜர்ரா. ஆண் குழந்தை. பிறந்து 2 வாரங்களே ஆகின்றன. நிமோனியாவால் குழந்தை இறந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஷமிமா பேகம் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமானது சிரிய நாட்டு ராணுவத்தாலம் பராமரிக்கப்படுகிறது. ஷமிமாவுக்கு வயது 19 தான். குழந்தையின் மறைவு குறித்து இங்கிலாந்து அரசு வேதனை தெரிவித்துள்ளது.

    19 வயது பெண்

    19 வயது பெண்

    ஷமிமா பேகம் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். ஆனால் அவரது பூர்வீகம் வங்கதேசமாகும். ஷமிமா பேகமுக்குப் பிறந்த குழந்தைக்கு இங்கிலாந்து குடியுரிமை வழங்கப்படும் என்று சமீபத்தில்தான் இங்கிலாந்து அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் குழந்தை இறந்த செய்தி வந்துள்ளது.

    பரிதாப மரணம்

    பரிதாப மரணம்

    போர்க்களத்தில், எந்தத் தவறும் செய்யாத இதுபோன்ற அப்பாவி உயிர்கள் தொடர்ந்து பலியாவது மிகவும் வேதனைக்குரியது என்று இங்கிலாந்து அரசு வருத்தம் தெரிவித்துள்ளது.

    15 வயதில் தீவிரவாதி

    15 வயதில் தீவிரவாதி

    தற்போது குழந்தையின் உடலை இங்கிலாந்தில் உள்ள பேகமின் பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிகிறது. பேகம் 15 வயதாக இருந்தபோது லண்டனை விட்டு சிரியாவுக்கு ஓடி வந்தார். அங்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்தார். இவருக்கு இங்கிலாந்து குடியுரிமை மற்றும் வங்கதேச குடியுரிமை இரண்டும் உள்ளது.

    ஏற்கனவே 2 குழந்தைகள் மரணம்

    ஏற்கனவே 2 குழந்தைகள் மரணம்

    பேகமுக்குப் பிறந்த 3வது குழந்தை இது. இதற்கு முன்பு பிறந்த இரண்டு குழந்தைகளும் சத்தின்மை மற்றும் நோய் காரணமாக இறந்து விட்டன. இதை பேகமே செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இருந்தபோது இந்த இரு குழந்தைகளும் அவருக்குப் பிறந்தன.

    மாற வேண்டும்

    மாற வேண்டும்

    தான் மாற விரும்புவதாகவும் அவர் இந்த அகதிகள் முகாமுக்கு நிறைமாத கர்ப்பிணியாக வந்து சேர்ந்தபோது செய்தியாளர்களிடம் மனம் விட்டுப் பேசியிருந்தார். இவரது கணவர் பெயர் யாகோ ரீட்ஜிக். இவர் டச்சு நாட்டவர் ஆவார். அவரும் கூட ஐஎஸ்ஐஸ் அமைப்பில் இடம் பெற்றவர்தான. தற்போது இவர் வட கிழக்கு சிரியாவில் உள்ள குர்திஷ் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+