24000 பேர் தான்... மாஸ்க் கட்டாயம்.. கடும் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் திறக்கப்பட்ட டிஸ்னிலேண்ட்!

சீனாவின் ஷாங்காய் டிஸ்னிலேண்ட் பூங்கா மூன்று மாதத்துக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

பீஜிங்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட ஷாங்காய் டிஸ்னிலேண்ட் பூங்கா, மூன்று மாதத்துக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது.

வால்ட் டிஸ்னி நிறுவனம் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களில் உள்ள பல நாடுகளில் கேளிக்கை பூங்காக்களை நடத்தி வருகிறது. உலகின் மிகப்பெரிய கேளிக்கை பூங்காக்களில் டிஸ்னிலேண்டும் ஒன்று.

Shanghai Disneyland park reopens after three months.

சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள டிஸ்கிலேண்ட் பூங்கா கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டுள்ளது. சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கல் வெகுவாக குறைந்துள்ளது. மக்கள் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் ஷாங்காய் டிஸ்னிலேண்ட் பூங்கா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 24,000க்கும் குறைவான பார்வையாளர்களே அனுமதிக்கப்படுகின்றனர். உள்ளே செல்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

மேலும் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் நுழைவு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டு ரேப்பிட் டெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். பூங்காவுக்கு உள்ளே ஒவ்வொரு பார்வையாளரும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Shanghai Disneyland park reopens after three months.

சீனாவின் ஊகான் மாகாணத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் தனது ஆட்டத்தை ஆரம்பித்தது. இத்தாலி, அமெரிக்கா, இந்தியா என படிப்படியாக பரவி, உலகையே இன்று அச்சுறுத்தி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க முடியாமல் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளே திண்டாடி வருகின்றன. ஆனால் கொரோனா பாதிப்பில் இருந்து சீனா இத்தனை சீக்கிரத்தில் மீண்டெழுந்து இருப்பது வியப்பை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Recommended Video

    அமெரிக்காவை தொடர்ந்து.. இந்தியாவுடன் மோதும் சீனா

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+