இந்தியா- பாக். யுத்தம் வரும்னு சொல்லவே இல்லையே.. பல்டி அடித்த பாக். பிரதமர்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், காஷ்மீர் பிரச்சினையை மையமாகக் கொண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே 4-வது போர் எந்த நேரத்திலும் மூளலாம்'' என கூறியதாக பாகிஸ்தானின் டான் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
இது இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கும் பதிலடி கொடுத்திருந்தார். என் வாழ்நாளில் பாகிஸ்தான் ஒருபோதும் வெல்லவே முடியாது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பிரதமர் நவாஸ் ஷெரீப் தாம் கூறியதாக வெளியான தகவலை மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதலாக உள்ள எந்தவொரு பிரச்சினைக்கும் பேச்சு வார்த்தைமூலம் அமைதி தீர்வு காணவேண்டும் என்பதுதான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கருத்து.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூளும் என்ற வார்த்தைகளை பிரதமர் ஒருபோதும் பயன்படுத்தவில்லை. இது தொடர்பான செய்தி, அடிப்படையற்றது. தவறானது. தீய நோக்கம் கொண்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications