இனி கைதிகள் மனைவியரைத் தனிமையில் சந்திக்கலாம் – ஷார்ஜாவில்!
ஷார்ஜா: ஷார்ஜாவில் சிறைக் கைதிகள் இனிமேல் மனைவியுடன் தனிமையில் சந்திக்கலாம் என்ற புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
உலகின் சில நாடுகளில் நடைமுறையில் இருந்து வரும் விதிமுறையின்படி மனைவியரை தனிமையில் சந்திக்க சிறைக்கைதிகளுக்கு அனுமதி உண்டு.
அந்த வகையில் ஷார்ஜாவில் தண்டனை அனுபவித்துவரும் கைதிகளும் இனி தங்களது மனைவியரை சிறை வளாகத்தினுள் தனிமையில் சந்திப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

புதிய சிறைச்சாலை:
ஷார்ஜாவில் உலகத்தரத்துக்கு ஏற்பவும், சர்வதேச மனித உரிமை சபையின் வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றியும் உருவாக்கப்பட்டு வரும் புதிய மத்திய சிறைச்சாலையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கட்டுமானப் பணி நிறைவு:
இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று அந்நாட்டின் சிறைத்துறை மற்றும் குற்றவாளிகள் சீர்திருத்தத் துறையின் இயக்குனரான கர்னல் அரெப் அல் ஷரீப் அறிவித்துள்ளார்.
தனிமையில் சந்திப்பு:
இந்தச் சிறை வளாகத்தில் உருவாக்கப்பட்டு வரும் தனிப்பகுதியில் "அல் கில்வா-அல் ஷரீயா" என்ற வகையில் தண்டனை அனுபவித்துவரும் கைதிகள் தங்கள் மனைவியரை இனி சட்டப்பூர்வமான முறையில் தனிமையில் சந்திக்க முடியும்.
புதுப்பிக்கப்படும் உறவுகள்:
இதன் மூலம் நீண்ட நாட்களாக பிரிந்திருக்கும் சூழ்நிலையில் இருந்து விடுபட்டு, தங்களது குடும்ப உறவுகளை அவர்கள் புதுப்பித்துக் கொள்ள முடியும் என்று கர்னல் அரெப் அல் ஷரீப் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications