ஹமாஸ் தாக்குதலுக்கு நெதன்யாகுதான் காரணம்! சொந்த பிரதமர் மீதே இஸ்ரேல் பாதுகாப்பு ஏஜென்சி விமர்சனம்
டெல் அவிவ்: கடந்த 2023ம் ஆண்டு அக்.7ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதற்கு காரணம் பிரதமர் நெதன்யாகுதான் என்று அந்நாட்டின் பாதுகாப்பு ஏஜென்சியான ஷின் பெட் (Shin Bet) குற்றம்சாட்டியுள்ளது. தாக்குதலுக்கான காரணத்தை விசாரணை நடத்தி அதை அறிக்கையாக ஷின் பெட் வெளியிட்டிருந்தது. இந்த அறிக்கையில் மேற்குறிப்பிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொந்த நாட்டின் பிரதமர் மீதே அந்நாட்டின் பாதுகாப்பு ஏஜென்சி சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பது இஸ்ரேல் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் விவாதங்களை கிளப்பியுள்ளது.

ஷின் பெட் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, "அக்.7 தாக்குதல் குறித்து முன்பே ஓரளவு கணிக்க முடிந்திருந்தாலும், அதை தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. தாக்குதலின் அளவு, நேரம் மற்றும் திடீர் தாக்குதலின் இடத்தை சரியாக கணிக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். பிரதமர் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய அரசின் 'Policy of Quiet' எனும் கொள்கை இந்த தாக்குதலுக்கு காரணமாக இருந்திருக்கிறது. ஹமாஸின் ஆயுத வளர்ச்சியை கட்டுப்படுத்த இந்த கொள்கை தவறிவிட்டது.
மட்டுமல்லாது ஹமாஸுக்கு கத்தார் நிதி உதவி கொடுக்க நெதன்யாகு அனுமதித்த விவகாரம், அல்-அக்ஸா மசூதியில் இஸ்ரேலிய யூதர்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது போன்றவை ஹமாஸ் தாக்குதுலுக்கு காரணமாக அமைந்துவிட்டது.
எல்லவற்றிற்கும் மேல்.. நாங்கள் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை எச்சரிக்கையாக முன்கூட்டியே கொடுத்திருந்தும், முன்னெச்சரிக்கையை இஸ்ரேலிய அரசு செய்யாதது தாக்குதலை சாத்தியமாக்கியது. இஸ்ரேல் பதிவு கொண்ட 45 சிம் கார்டுகள் அக்.7 தாக்குதலுக்கு முன்பதாக வழக்கத்தை விட அதிக ஆக்டிவாக இருந்தது. இதுவும் முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்டு சொல்லப்பட்டிருந்தது. ஆனால் காதில் வாங்கினீர்களா? இல்லையே!
எங்களுக்கும் இஸ்ரேலிய ராணுவ புலனாய்வுக்கும் இடையே ஒத்துழைப்பு குறைந்து இருந்ததும் தாக்குதலுக்கு காரணமாகும்.
அரசியல் குழப்பங்கள் இந்த தாக்குதலை சாத்தியமாக்கியதில் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. பிரதமர் நெதன்யாகு, எங்கள் (Shin Bet) தலைவர் ரோனென் பாரை பதவியிலிருந்து தூக்கியடிக்க முயன்றார். உளவுத்துறையிலும் இதே கதைதான் நடந்தது. இந்த குழப்பங்களுக்கு மத்தியில் எதிரியின் தாக்குதலை நாம் கவனிக்க தவறிவிட்டோம்" என்று அடுக்கடுக்கான புகார்களை Shin Bet முன்வைத்திருக்கிறது. குற்றச்சாட்டுகளுக்கு நெதன்யாகு என்ன பதில் சொல்லப்போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.
இஸ்ரேலின் வெளிநாட்டு உளவு அமைப்பான மொசாட் (Mossad) குறித்து சில நாட்களுக்கு முன்னர் இஸ்ரேலிய ராணுவம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அக்.7 தாக்குதலுக்கான விசாரணை முடிவுகள் என்கிற பெயரில்தான் அறிக்கை வெளியாகியிருந்தது. இந்த அறிக்கையில், மொசாட்-ஐ நம்பியது வேஸ்ட் என்று காட்டமாக கூறியிருந்தது.
இன்றைய தேதியில் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த உளவு அமைப்பாக இருக்கும் மொசாட் குறித்து சொந்த நாட்டு ராணுவமே சகட்டுமேனிக்கு விமர்சித்திருந்தது பேசு பொருளானது. இப்போது பிரதமர் குறித்து அந்நாட்டின் பாதுகாப்பு ஏஜென்சி குற்றம்சாட்டியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
-
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications