உயர பறந்த சிறகுகள்! பிரான்சில் கெத்தாக ரஃபேல் விமானத்தை இயக்கி புதிய சாதனையை படைத்தார் ஷிவாங்கி சிங்
பாரிஸ்: பிரான்சில் நடைபெறும் சர்வதேச நாடுகளின் விமானப்படை பயிற்சியில் பங்கு பெற இந்திய போர் விமான ஷிவாங்கி சிங் சென்றிருக்கிறார். இதன் மூலம் வெளிநாடுகளில் நடைபெறும் போர் பயிற்சியில் ரஃபேல் விமானத்தை இயக்கிய முதல் பெண் போர் விமானி என்கிற பெருமையை ஷிவாங்கி பெற்றிருக்கிறார்.
இந்திய விமானப்படையினரின் அனுபவத்தை அதிகரிக்கும் விதமாக இந்த பயிற்சியில் வீரர்கள் பங்கேற்கின்றனர். பிரான் விமானப்படை தளமான MONT DE MARSAN எனும் இடத்தில் இந்த பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் இந்தியா சார்பில் முதன் முறையாக ரஃபேல் விமானங்கள் பங்கேற்கின்றன. அதன்படி 4 ரஃபேல் விமானங்கள், இரண்டு C-17 குளோப் விமானங்கள், இரண்டு ll- 78 விமானங்களுடன் 165 விமானப்படை வீரர்கள் இந்த பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

இந்த பயிற்சி 'ஓரியன் பயிற்சி' என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து ஒரு உருவத்தை உருவாக்கி இருப்பதுதான் ஓரியன் நட்சத்திர கூட்டம் என்று சொல்லப்படுகிறது. என இந்த பயிற்சியில் இந்தியா, பிரான்ஸ் மட்டுமல்லாது ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, பிரிட்டன், ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் விமான படைகளும் இந்த பயிற்சியில் பங்கேற்கின்றன. இதில் இந்தியா சார்பில் பங்கேற்கும் மூன்று விமானங்களும் தனிச்சிறப்பு வாய்ந்தவையாகும்.
ஏனெனில் இந்த மூன்று விமானங்களும் விமானப்படையின் முக்கிய அங்கமாக இருக்கிறது. இதில் ll-78 எனும் விமானம் சோவியத் ரஷ்யா காலத்தில் வாங்கப்பட்டதாகும். இந்தியாவிடம் மொத்தம் 6 ll-78 விமானங்கள் இருக்கிறது. இது ஒரு கார்கோ வகை விமானமாகும். அதாவது சுமார் 1 லட்சம் எடையுள்ள பொருட்களை இந்த விமானம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லும். அதேபோல நடுவானில் போர் விமானங்களுக்கு இது பெட்ரோலை நிரப்பும். பொதுவாக இந்த வகை விமானங்கள் ஒரு முறை ஒரு போர் விமானத்திற்கு எரிபொருளை நிரப்பும். ஆனால் இந்த ll-78 ஒரே சமயத்தில் 2 விமானங்களுக்கு எரிபொருளை நிரப்பும்.
மற்றொரு விமானம் C-17. அமெரிக்க தயாரிப்பான இந்த விமானம் கார்கோ வகை விமானம்தான். சமீபத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கர்களை வெளியேற்ற இந்த விமானம்தான் பயன்படுத்தப்பட்டது. டாங்கிகளையும், ஆயுதங்களையும் இடம் மாற்றம் செய்ய இந்த வகை விமானங்கள் பயன்படுகின்றன. இந்த விமானங்கள் அதிகபட்சமாக 450 கி.மீ வேகத்தில் பறக்கும் திறன்கொண்டவையாகும். அதேபோல சுமார் 6 லட்சம் கி.கி எடையுடன் இந்த விமானம் வானில் பறக்கும் திறன் கொண்டது. அதிகபட்சமாக சுமார் 6 ஆயிரம் கி.மீ வரை இந்த விமானம் இடை நில்லாமல் பறக்கும்.

இந்தியா சார்பில் ஓரியன் பயிற்சியில் பங்கேற்கும் மூன்றாவது ரக விமானம் ரஃபேல். இந்த விமானம் இதற்கு முன்னர் எந்த வெளிநாட்டு பயிற்சியிலும் ஈடுபட்டது கிடையாது. முதன்முறையாக தற்போது ஓரியன் பயிற்சியில் ஈடுபட இருக்கிறது. இந்திய விமான படையில் ரஃபேல் விமானத்தை விட அதிக வேகமாக பறக்கும் விமானங்கள் இருந்தாலும் நவீன தொழில்நுட்பத்துடன் கூட விமானங்கள் குறைவுதான். எனவே இந்த தேவையை பூர்த்தி செய்யதான் ரஃபேல் விமானங்கள் வாங்கப்பட்டன. தற்போது பிரான்சில் நடைபெற உள்ள இந்த ஓரியன் பயிற்சில் ஃப்ளைட் லெப்டினன்ட் ஷிவாங்கி சிங் ரஃபேல் விமானத்தை இயக்குகிறார்.
இதன் மூலம் வெளிநாடுகளில் நடைபெறும் விமானப்படை பயிற்சியில் ரஃபேல் விமானத்தை இயக்கிய முதல் பெண் விமானி என்கிற சாதனை ஃப்ளைட் லெப்டினன்ட் ஷிவாங்கி சிங் பெற்றிருக்கிறார். இதற்கு முன்னர் கடந்த ஜனவரி மாதம் ஜப்பானில் நடைபெற்ற இரு நாடுகளின் கூட்டு விமானப்படை பயிற்சியில் சுகோய் - 30 எம்கேஐ எனும் போர் விமானத்தை அவனி சதுர்வேதி இயக்கியிருந்தார். இதன் மூலம் வெளிநாட்டில் சுகோய்-30 விமானத்தை இயக்கிய முதல் பெண் பைலட் என்கிற பெருமையை அவனி சதுர்வேதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications