Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

29 நாய்களை சரமாரி சுட்டுக் கொன்ற கும்பல்.. கண்ணில் பட்டவர்களை எல்லாம்.. கத்தாரில் பயங்கரம்

29 நாய்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கத்தாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

Subscribe to Oneindia Tamil

தோஹா: குழந்தைகளை கடித்துவிட்டதால், ஆத்திரத்தில், 29 நாய்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கத்தாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

மேற்கு ஆசிய நாடான கத்தாரில், தலைநகர் தோஹா அருகே ஒரு தொழிற்சாலையின் பாதுகாப்பு பகுதி உள்ளது. இந்த காலனி பகுதியில், ஏராளமான தெரு நாய்கள் உள்ளன..

இவைகளை பாவ்ஸ் ரெஸ்கியூ கத்தார் என்ற தன்னார்வ நிறுவனம் ஒன்று பராமரித்து வருகின்றனர்.. இதற்கான உணவு தயாரிப்பு மற்றும் உணவு வழங்கல் இடமும் இந்த நிறுவனத்தின் வளாகத்திலேயே உள்ளது.

 கண்ணில் பட்ட நாய்களை..

கண்ணில் பட்ட நாய்களை..

இந்நிலையில், அருகில் இருந்த காலனிக்குள் நுழைந்த ஒருநாய், குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த 5 சிறுவர்களை கடித்து குதறியதாக கூறப்படுகிறது.. இதனால் ஆத்திரமடைந்த ஆயுதமேந்திய குழு ஒன்று, தொண்டு நிறுவனத்துக்குள் அத்துமீறி நுழைந்து, கண்ணில் பட்ட நாய்களை எல்லாம் சரமாரியாக சுட்டுக் கொன்றது.. இதில் 29 நாய்கள் சுருண்டு விழுந்து இறந்தன.. பல நாய்கள் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தன..

 குதறிய நாய்கள்

குதறிய நாய்கள்

ஆத்திரம் தீராத அந்த கும்பல், பொதுமக்களையும் தாக்கி காயப்படுத்தியதுடன், அங்கிருந்த செக்யூரிட்டிகளையும் துப்பாக்கிகளை காட்டி மிரட்டியிருக்கிறது. அதற்கு பிறகு, நாய்களுக்கு உணவு தந்து பராமரிக்கப்படும் பகுதிக்குள்ளும் நுழைந்து சேதமாக்கினார்கள். ஆயுதம் ஏந்திய அந்த குண்டர்கள், நாய் கடித்ததாக கூறப்படும் சிறுவனின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.. குழந்தையை நாய்க்குட்டி கடித்ததால்தான், தாங்கள் அந்த நாய்களை சுட்டுக் கொன்றதாக தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 ஈத் முதல் நாள்

ஈத் முதல் நாள்

இந்த சம்பவத்தில் அந்த பகுதியே நடுநடுங்கி உள்ளது.. அந்த கும்பல் துப்பாக்கியுடன் நுழைந்ததுமே, பொதுமக்கள் பலர் பயத்தில் சிதறி ஓடிவிட்டார்களாம்.. இதுகுறித்து சம்பவத்தை நேரில் பார்த்தஒருவர் சொல்லும்போது, "ஈத் முதல் நாள் அன்று, அந்த பகுதியே அமைதியாக இருக்கும், பிடிபடுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதால்தான், அந்த நேரத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, அந்த கும்பல் துப்பாக்கியுடன் உள்ளே வந்திருக்கிறது என்றார்..

 உலுக்கும் இதயம்

உலுக்கும் இதயம்

அதேபோல, மற்ற விலங்குகளும் அங்கிருந்து ஓடிவிட்டன.. அவைகள் அதற்கு பிறகு, திரும்பி வரவே இல்லை என்கிறார்கள்.. இந்த சம்பவம் குறித்து, 'பாவ்ஸ்' தன்னார்வ தொண்டு நிறுவனம், சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளதாவது: "இதயத்தை உலுக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கொலையாளிகளுக்கு உரிய தண்டனை தர வேண்டும்.. கத்தாரில் 2 பேர் கொடூரமாக அப்பாவி பிராணிகளை சுட்டுக் கொன்றுள்ளனர். அவர்களின் குழந்தையை நாய் கடித்ததால், ஆத்திரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்... காட்டுமிராண்டித் தனமான இந்த செயலை செய்தவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளது..

 லைசென்ஸ்

லைசென்ஸ்

கத்தாரை பொறுத்தவரை, துப்பாக்கி வைத்திருக்க உள்துறை அமைச்சகத்திடம் உரிமம் பெற வேண்டும்... அதற்கு 21 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும், குற்றப்பதிவு பின்னணி இல்லாதவராக இருக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கண்டிஷன்கள் உள்ளன.. அப்படியே லைசென்ஸ் இருந்தாலும், பொது இடங்களில் துப்பாக்கியை காட்ட அனுமதி இல்லை.. அதனால் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பது மட்டுமல்லாமல், அவைகளை பயன்படுத்தவும் கடுமையான கட்டுப்பாடுகளையும், சட்டங்களையும் கொண்டு வர வேண்டும் என்று கருத்துக்கள் வலுத்து வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+