போனுடன் விளையாடிக் கொண்டிருந்த மாஜி காதலியை அடித்த மாரடோனா... வீடியோ ரிலீஸ்!
பியூனஸ் அயர்ஸ்: கால்பந்து ஜாம்பவான் மாரடோனா, தனது மாஜி காதலி ரோசியோ ஒலிவாவை சரமாரியாக அடிக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாரடோனா கோபக்காரர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தனது காதலியை அவர் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவை மாரடோனாவின் முன்னாள் காதலிதான் படமாக்கியுள்ளார். ஆனால் அதை யார் வெளியிட்டது என்பது தெரியவில்லை.

சோபாவில் மாரடோனா
ஒரு சோபாவில் மாரடோனா அமர்ந்திருக்கிறார். அவருக்கு எதிர் புற சோபாவில் ரோசியோ உட்கார்ந்திருக்கிறார்.

செல்போனை நோண்டிக் கொண்டிருந்த காதலி
அவரது கையில் கேமரா செல்போன் உள்ளது. அவர் அதில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார் போல. அப்போது திடீரென எழுந்து சென்ற மாரடோனா, தனது காதலியை நோக்கி சென்று அவரை அடிக்கிறார். இந்தக் காட்சியை ரோசியோ வீடியோவில் படமாக்கியுள்ளார்.

அதையே பார்த்துக் கொண்டிரு
மேலும் தனது காதலியைப் பார்த்து ஸ்பெயின் மொழியில் உன் போனையே பார்த்துக் கொண்டிரு, உன் போனையே பார்த்துக் கொண்டிரு என்றும் கோபமாகவும் மாரோனா சத்தம் போடுகிறார்.

பைத்தியமா உனக்கு
மாரடோனாவின் செயலால் அதிர்ச்சி அடைந்த ரோசியோ, உனக்கு என்னாச்சு, பைத்தியம் பிடித்து விட்டதா. அடிக்காதே நிறுத்து நிறுத்து என்று அலறுகிறார் ரோசியோ.

பியூனஸ் அயர்ஸ் வீட்டில் வைத்து
அக்டோபர் மாதத் தொடக்கத்தில் துபாயிலிருந்து பியூஸ் அயர்ஸ் திரும்பியிருந்தார் மாரடோனா. அந்த சமயத்தில்தான் அவரது வீட்டில் வைத்து இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.

ரோசியோ இப்போது இல்லை
தற்போது ரோசியோவை விட்டு மாரடோனா பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ காட்சி இப்போதுதான் முதல் முறையாக வெளியாகியுள்ளது. இதை தென் அமெரிக்க டிவி ஒன்று ஒளிபரப்பியுள்ளது.

அடிக்கலையே
இதுகுறித்து அர்ஜென்டினாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் மரீனா கால்ப்ரோ கூறுகையில், அந்த வீடியோவில் இருப்பது தான்தான் என்பதை மாரடோனா ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் ரோசியோவை தான் அடிக்கவில்லை என்று என்னிடம் அவர் கூறியுள்ளார்.

பிள்ளைகள் மீது சத்தியமா சொல்றேன்
நான் ரோசியோ வைத்திருந்த போனைத் தட்டித்தான் விட்டேன். என் பிள்ளைகள் மீது சத்தியமாக கூறுகிறேன், நான் ஒரு பெண்ணை அடிக்கும் அளவுக்கு மோசமானவன் இல்லை என்று கூறினார் மாரடோனா.
இருப்பினும் மாரடோனா தரப்பிலிருந்து எந்த விளக்கமும் இதுவரை வரவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications