கலிபோர்னியாவில் யூத வழிபாட்டுத் தளத்தில் துப்பாக்கி சூடு.. ஒருவர் பலி.. 3 பேர் படுகாயம்!

கலிபோர்னியாவில் உள்ள யூதமத வழிபாட்டுத் தளத்தில் இன்று காலை நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.

Subscribe to Oneindia Tamil

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள யூதமத வழிபாட்டுத் தளத்தில் இன்று காலை நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக யூதர்கள் அதிகம் தாக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 11 மாதங்களுக்கு முன்பு பீட்டர்ஸ்பெர்க் பகுதியில் யூதர்கள் மீது இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 பேர் பலியானார்கள்.

இதுதான் அமெரிக்காவில் கடந்த 10 வருடங்களில் யூதர்கள் மேல் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் ஆகும். இதையடுத்து இன்று மீண்டும் அதேபோல ஒரு தாக்குதல் அங்கு நடைபெற்றுள்ளது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள யூதமத வழிபாட்டுத் தளத்தில் இன்று காலை நடந்த துப்பாக்கி சூடு நடந்தது. இன்று யூதர்களின் முக்கியமான சடங்கு திருநாள் என்பதால் சான் டீகோ பகுதியில் யூத வழிபாட்டு தளத்தில், வழிபாடு நடத்தி வந்தனர். அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் குழுமி இருந்தனர்,

துப்பாக்கி சூடு தாக்குதல்

துப்பாக்கி சூடு தாக்குதல்

அப்போது அங்கே துப்பாக்கியோடு வந்த 19 வயது இளைஞர் மக்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த இவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

வேகமாக ஓடினார்

வேகமாக ஓடினார்

இதையடுத்து அந்த இளைஞர் வேகமாக மீண்டும் மக்களை நோக்கி சுட தொடங்கினார். ஆனால் அவரது துப்பாக்கியில் திடீர் என்று கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓடி சென்றார்.

போலீசார் விளக்கம்

போலீசார் விளக்கம்

தப்பித்து சென்ற இளைஞரை போலீசார் வேகமாக காரில் துரத்தி சென்றனர். பின் அமெரிக்க போலீசார் ஹெலிகாப்டர் உதவியுடன் தப்பி சென்ற இளைஞர் கண்டுபிடித்து கைது செய்தனர். தற்போது போலீசார் இதுகுறித்து இளைஞரிடம் விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+