குலை நடுங்குதே! மைனஸ் 58 டிகிரிக்கு போன வெப்பம்.. வெளியே கால் வைத்தால் உறைந்தே செத்துவிடுவோம்! பகீர்
மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள சைபீரியாவில் சில பகுதியில் வரலாற்றில் இல்லாத வகையில் வெப்பம் மிக மோசமாகச் சரிந்துள்ளது. வெளியே சென்றாலே உறைந்துவிடுவோம் என்ற சூழலே அங்கு உருவாகியுள்ளது.
உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யா. இது இந்தியாவைக் காட்டிலும் சுமார் நான்கு மடங்கு பெரியது. 1.7 கோடி சதுர கிமீ பரப்பளவு கொண்ட ரஷ்யாவில் பல்வேறு கலாச்சாரம், மொழிகள் உள்ளன.

அப்படி வடக்கு ரஷ்யாவில் ஆர்க்டிக், அதாவது வட துருவம் அருகே அமைந்துள்ள பகுதி தான் சைபீரியா. இந்த பகுதியில் தான் இப்போது சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் குறைந்துள்ளது.
ரஷ்யா: ரஷ்யாவின் இந்த சைபீரியா பகுதியில் நேற்றைய தினம் வெப்பம் மைனஸ் 58 டிகிரி செல்சியஸாக (மைனஸ் 72 டிகிரி பாரன்ஹீட்) குறைந்தது. சைபரியா என்பது ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 5,000 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. அதாவது இது சென்னை டூ டெல்லியை காட்டிலும் இரண்டு மடங்கு தொலைவாகும்.
இங்கே அமைந்துள்ள யாகுட்ஸ்க் நகரம் உலகின் குளிரான நகரங்களில் ஒன்றாகும். இந்த நகரத்தில் தான் இப்போது வெப்பம் கடுமையாகச் சரிந்துள்ளது. இந்த நகரம் முழுக்க உறைபனி மேகங்கள் மற்றும் மூடுபனியால் மூடப்பட்டிருந்தது, இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ள நிலையில், அது பார்க்கும் அனைவருக்கும் அச்சமூட்டுவதாக இருக்கிறது. அந்தளவுக்குக் கண்ணில்பட்டவரை எல்லா இடங்களிலும் வெள்ளை நிறத்தில் பனி போர்த்தி இருக்கிறது.
உறைந்தே செத்துடுவோம்: இது தொடர்பாக அங்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், "இந்த வானிலையை அனுபவிப்பதற்காகவே நான் இங்கு யாகுட்ஸ்க் வந்தேன்.. டிசம்பரில் எப்போதும் இந்தப் பகுதியில் குளிர் குறையும்.. ஆனால் இந்தளவுக்கு வெப்பம் குறையும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை. தயார் நிலையில் உடைகளை எடுத்து வந்ததால் நான் தப்பித்தேன். இல்லையென்றால் நான் சில நிமிடங்களில் உறைந்து போவேன். இந்த உறையும் வெப்பத்தால் எனது உடையே கடினமாகிவிட்டது..
இந்த குளிரில் போனுக்கும் ஏதோ ஆகிவிட்டது. புல் சார்ஜ் இருந்தாலும் மொபைல் சார்ஜ் சில நிமிடங்களில் காலியாகிவிடுகிறது.. சட்டை, பேண்ட், கையுறை என ஒன்றுக்கு இரண்டு போட்டு அதன் மீது ஸ்வெட்டர் போட்டால் மட்டுமே சமாளிக்க முடிகிறது" என்றார். மேலும், கெட்டியாக உடைகளைப் போட்டுக் கொண்டு நடந்து கொண்டே இருக்க வேண்டி இருப்பதாகவும் சற்று நேரம் அமர்ந்தாலும் உறையும் அளவுக்கு உடலில் குளிர் அதிகரித்துவிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மைனஸ் 58 டிகிரி: நேற்று இரவு சைபீரியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சகா குடியரசின் பல பகுதிகளில் மைனஸ் 55 செல்சியஸ் கீழ் சென்றது. குறிப்பாக அங்குள்ள ஓமியாகோன் என்ற பகுதியில் மைனஸ் 58 செல்சியஸுக்கு சென்றது. ஈரப்பதம் மற்றும் காற்றின் காரணமாக இது மைனஸ் 63 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
யாகுட்ஸ்கில் உள்ள சந்தையில், சாதாரணமாக மீனை வெளியே வைத்தாலே அது உறைந்துவிடுகிறது. பொதுவாக மீனை ஐஸ் பெட்டிகளில் வைத்தே விற்பார்கள். ஆனால், இந்த குளிரில் சும்மாவே அது உறைந்துவிடுவதாகவும் ஐஸ் பெட்டிகள் தேவையில்லை என்றும் மீன் விற்பனை செய்வோர் தெரிவித்தனர்.
-
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications