அக்டோபர் 10ம் தேதி வளைகுடா பகுதியில் சித்த மருத்துவ பட்டறை: மிஸ் பண்ணாதீங்க
கலிபோர்னியா: வளைகுடா பகுதி தமிழ் மன்றம் வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி கலிபோர்னியாவில் சித்த மருத்துவ பயிற்சி பட்டறையை நடத்துகிறது.
இன்றைய கால கட்டத்தில் நமது உடலுக்கு வரும் நோய்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா. இதற்கு நமது வாழ்க்கை முறையும், உணவு பழக்கவழக்கமும் தான் காரணமாக உள்ளது. பெரும்பான்மையான நோய்களுக்கு தாவரங்கள் மற்றும் இயற்கையிலேயே முழுமையாக குணப்படுத்தும் தன்மை உள்ளது. தமிழகத்தில் பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள் பல நோய்களை முழுமையாக குணப்படுத்த தேவைப்படும் மூலிகைகள் பற்றி பாடல்களில் எழுதி சென்றுள்ளனர். அதைவிட முக்கியமாக எவ்வாறு முறையாக வாழ்ந்தால் நோயை தவிர்க்கலாம் என்றும் கூறி சென்றுள்ளனர்.

நோயை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்வு வாழ்வது எப்படி என்பது பற்றியும், பருவ காலங்களுக்கு ஏற்ப பழக்கவழக்கங்களை மாற்றிக் கொள்வது பற்றியும் விரிவாக விளக்க வருகிறார் சித்த மருத்தவர் ப. செல்வ சண்முகம். அவர் உலக சித்த மருத்துவ அறக்கட்டளையின் (World Siddha Trust) தலைவர் ஆவார். கடந்த ஆண்டு ஃபெட்னா விழாவுக்கு மருத்துவர் செல்வ சண்முகம் அமெரிக்கா வந்து சென்றபின் இங்கிருந்து தமிழகம் சென்று வந்த எத்தனையோ பேர் அவரைச் சென்னையில் சந்தித்து மருத்துவ ஆலோசனை பெற்று வருகின்றனர்.
அதற்கு காரணம் அவருடைய ஆழமான உடற்கூறும் அறிவியலறிவும், மருத்துவ அறிவும், அதை நயமாக எடுத்துரைக்கும் பாங்குமே. சித்த மருத்துவத்தின் அடிப்படையை அழகாகப் படங்களுடனும், ஆரோக்கியமான வாழ்வுமுறையை எடுத்துக்காட்டுகளுடனும், எளிமையான, இயல்பான, கலப்படமில்லாத தமிழில் எடுத்துரைப்பதில் வல்லவர்.
மருத்துவர் செல்வ சண்முகம் அவர்கள் சித்த மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆரோக்கியமான வாழ்வு வாழ தேவையான வாழ்வியல் முறையை விளக்கவும், மாரடைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடற்பருமன் ஆகிய நோய்களை கட்டுப்படுத்தும் வழி பற்றியும் விளக்க "நலம் காக்கும் சித்த மருத்துவம்" என்ற பயிற்சி பட்டறையை வளைகுடா பகுதியில் நடத்த இருக்கிறார். வளைகுடா பகுதி தமிழ் மன்றம் நடத்தும் இந்த பட்டறைக்கு அனுமதி இலவசம்.
வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி கலிபோர்னியாவின் ப்ரெமோன்ட்டில் இருக்கும் கோகனட் ஹில் பார்ட்டி ஹாலில் இந்த பயிற்சி பட்டறை நடைபெறுகிறது. வளைகுடா பகுதி தமிழர்கள் அனைவரும் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications