அமெரிக்கா... மூவரை காப்பாற்ற ஆற்றில் குதித்த இந்தியர் உயிரிழப்பு.. குவியும் பாராட்டு!!
கலிபோர்னியா: கலிபோர்னியாவில் கிங்க்ஸ் ஆற்றில் குதித்து மூன்று குழந்தைகளை காப்பாற்ற முயற்சித்து உயிரிழந்த 29 வயது சீக்கியர் மஞ்ஜித் சிங்கிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஆற்றில் விழுந்த குழந்தைகளில் மூவரில் இருவர் தப்பினர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஓடும் கிங்ஸ் ஆற்றின் கரையில் 8 வயதிலான இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் மூவரும் ஆற்று நீரால் இழுத்துச் செல்லப்பட்டனர். அங்கு நின்று கொண்டிருந்த மஞ்ஜித் கொஞ்சமும் யோசிக்காமல் ஆற்று நீரில் குதித்தார். இவர் குதிப்பதைப் பார்த்து அங்கு இருந்த மற்றவர்களும் ஆற்று நீரில் குதித்து இரண்டு குழந்தைகளை காப்பாற்றினர். ஒரு பெண் குழந்தை நீருக்கு அடியில் சிக்கி 15 நிமிடங்கள் கழித்து மீட்கப்பட்டது.

இந்த நிலையில் மஞ்ஜித் நிலை என்னவானது என்று தெரியவில்லை. 40 நிமிடங்களுக்குப் பின்னர் நீருக்குள் இருந்து வெளியே மீட்புப் படையினரால் கொண்டு வரப்பட்டார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா வந்த மஞ்ஜித் டிரக் வர்த்தகத்தில் ஈடுபட்டு இருந்தார். பிரான்சோ என்ற இடத்தில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதிதான் டிரக் பயிற்சி பள்ளியும் துவக்கினார். பயிற்சி முடித்த பின்னர் ஜெட் ஸ்கை செய்வதற்காக கிங்க்ஸ் ஆற்றுக்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது உயிரை துச்சமென நினைத்து மற்றவர்களை காப்பாற்ற முயற்சித்து உயிரிழந்த மஞ்ஜித்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications