கிறிஸ்தவர்களைப் பற்றி இணையத்தில் தவறாக எழுதிய சிங்கப்பூர் இளைஞர்.. மனநலனை பரிசோதிக்க உத்தரவு
கோலாலம்பூர்: கிறிஸ்தவர்களைப் பற்றி தவறாக இணையத்தில் எழுதியதற்காக கைது செய்யப்பட்ட இளைஞரின் மனநலத்தை சோதிக்க சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த 16 வயது இளைஞர் அமோஸ் யீ. இவர் சமீபத்தில் தனது இணையதளப் பக்கத்தில் கிறிஸ்தவர்களைப் பற்றிய அவதூறான கருத்துக்களைப் பதிவு செய்திருந்தார். ஆபாசப் படம் ஒன்றையும் அதில் போட்டிருந்தார்.
எதிர்ப்புகளைத் தொடர்ந்தும் அதனை நீக்க அமோஸ் மறுத்ததால், அவரைப் போலீசார் கைது செய்தனர்.
அமோஸை மூன்று வார போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தற்போது அமோஸை மனநல மையத்தில் வைத்து இரண்டு வாரங்கள் சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம் சிங்கப்பூர் தந்தை லீ குவான் யூ மறைந்த போதும், இதே போன்று சர்ச்சைக்குரிய விமர்சனத்தை வலைதளத்தில் வெளியிட்டதற்காக அமோஸ் கைது செய்யப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது லீ குவான் யூவையும், இயேசுவையும் இணைத்து அமோஸ் கருத்து தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications