இப்படியுமா செய்வாங்க? சிக்கன் கடையான சீதை-ராமர் கோவில்.. பாகிஸ்தானில் என்ன நடக்கிறது? ஷாக் தகவல்
இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் உள்ள அஹ்மத்பூரில் பழமையான சீதை-ராமர் கோவில் சிக்கன் கடையாக மாற்றப்பட்டுள்ள வீடியோ ஒன்று இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக உள்ளது. அங்கு இந்து மதத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகின்றனர். ஆண்டுதோறும் அங்கு வசித்து வரும் இந்து மக்களின் எண்ணிக்கை என்பது குறைந்து வருகிறது.

இதனால் இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது அங்கு இருந்த இந்துக்களை ஒப்பிடும்போது தற்போது குறைந்த அளவில் மட்டுமே வசித்து வருகின்றனர். அதோடு மட்டுமின்றி அவ்வப்போது சிறுபான்மையினராக வாழும் இந்து மக்கள் மீதும், கோவில்கள் மீதும் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நடந்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் தற்போது இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது பாகிஸ்தானின் அஹ்மத்பூர் சியாலில் பழமையான சீதை-ராமர் கோவில் உள்ளது. இந்த கோவில் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்த கோவில் தற்போது சிக்கன் கடையாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது கோவிலின் வாசலில் சிக்கன் விற்பனை செய்யப்படுகிறது.
பாகிஸ்தானில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க பழமையான கோவில்களில் ஒன்றாக இது இருந்தது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த இந்து மக்கள் வழிபாடு செய்து வந்தனர். அதோடு கோவிலில் வரையப்பட்டுள்ள சிற்பங்கள் பாரம்பரிய கட்டடக்கலையை பறைசாற்றும் வகையில் உள்ளது. இத்தகைய சூழலில் தான் தற்போது இந்த கோவில் ஆக்கிரமிக்கப்பட்டு சிக்கன் கடையாக மாறியுள்ளது.
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானில் மதசுதந்திரம் என்பது அப்பட்டமாக மீறப்பட்டள்ளது. பாகிஸ்தான் அங்குள்ள சிறுபான்மை மக்களான இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது என்பதற்கு சாட்சியாக இந்த வீடியோ உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதோடு பாகிஸ்தானில் உள்ள சீதை-ராமர் கோவில் சிக்கன் கடையாக மாற்றப்பட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. இது பாகிஸ்தானில் இந்துக்களுக்கு எதிரான செயல்கள், துன்புறுத்துதல் உள்ளிட்ட சம்பவங்கள் இன்னும் தொடர்கிறது என்பதற்கு சாட்சியாக இது அமைந்துள்ளது. அதோடு அங்கு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ள வருவதாக நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications