நாடு திரும்பும் இலங்கைத் தமிழர் சிவராசா.. அனைத்து வழக்குகளை மொத்தமாக கைவிட்டது சவூதி அரேபியா

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: மதநிந்தை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழர் சிவராசா அனோஜன் மீதான அனைத்து வழக்குகளையும் சவூதி அரேபியா அரசு ரத்து செய்தது. கடந்த 13ம் தேதி அன்று மரண தண்டனை ரத்து செய்யப்பட்டிருந்தது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அவர் சொந்த நாடு திரும்புவார் என இலங்கை அரசு தகவல் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் இந்து கடவுள் குறித்து சர்ச்சையாக பேசிய ஒருவருடன் விவாதத்த போது, முகமது நபி குறித்து இலங்கைத் தமிழர் சிவராசா அனோஜா அவதூறாக பேசிய குற்றச்சாட்டு எழுந்தது.தமிழில் இவர் போட்ட கருத்தை , சிலர் சவூதி அரசுக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. இநத விவகாரத்தில் சவுதி அரேபியா அரசு இலங்கை தமிழரான சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதித்தது. இந்த சூழலில் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

Sri Lanka Saudi Arabia

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் கூறினார்.

சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை கடந்த அக்டோபர் மாதம் 14ம் தேதி அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்த நிலையில், ஏனைய தண்டனைகளிலிருந்து அவர் கடந்த 9ம் தேதி சவுதி அரேபியாஅரசு விடுவித்து இருந்தது. இந்த வழக்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு முன்னெடுத்து செல்வதில்லை என சௌதி அரேபியா அரச வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்ததால் விடுதலையாகியுள்ளார்.

என்ன பிரச்சனை

இலங்கையின் கதிர்காமம் முருகன் கோயிலுக்கு மிகவும் பிரசித்தி பெறறது. இந்த கோயிலுக்கு இலங்கை நாட்டின் வடக்கு பகுதியிலிருந்து ஒரு குழு பாத யாத்திரை சென்றிருந்தது. இந்த பாத யாத்திரை குழுவுடன், சுப்ரமணியம் என்றழைக்கப்படும் நாய் ஒன்றையும், பாத யாத்திரையில் ஈடுபட்டவர்கள் அழைத்து சென்றிருந்தார்கள். அந்த சுப்ரமணியம் என்றழைக்கப்படும் நாயின் மீது இஸ்லாமிய இளைஞர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த இளைஞன் நாயின் மீது தாக்குதல் நடாத்தும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. இது இலங்கையில் பெரும் பிரச்சனையாக மாறியது. குறிப்பிட்ட இஸ்லாமிய இளைஞன் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் முஸ்லிம் இளைஞன் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

Sri Lanka Saudi Arabia

நாயின் மீது தான் அறியாமல் தாக்குதல் நடாத்தியதாக தெரிவித்த முஸ்லிம் இளைஞன், பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார். ந்த சம்பவம் தொடர்பிலான விவாதம் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக பேசுப் பொருளாகியது. அப்போது இந்து மத கடவுளை தவறாக பிரதிபலிக்கும் வகையில் ஒருவர் பேஸ்புக்கில் வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் வகையில், அனோஜன் முகமது நபியை நிந்திக்கும் வகையிலான கமெண்ட் ஒன்றை வெளியிட்டு, குறுகிய நேரத்தில் அந்த பதிவை அழித்துவிட்டார்.

எனினும் அனோஜன் வெளியிட்ட கருத்தை ஸ்கிரின் ஷாட் எடுத்த சிலர், அதனை பகிர்ந்து, மீண்டும் பேசுப் பொருளாக்கினர். அவர் சவுதியில் வசித்த நிலையில், அனோஜன் கருத்தை சவுதி அரசுக்கு சிலர் மொழிபெயர்த்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஐந்து வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் மேல்முறையீட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து அரசுகளின் வேண்டுகோளை தொடர்ந்து மரண தண்டனை ரத்து செய்யப்பட்டது. தற்போது அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுதலையாகி உள்ளார். விரைவில் நாடு திரும்ப உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+