குட்டி தேவதை ஜியாஜியா.. தந்தைக்கு தாயாகிப்போன 6 வயது மகள்!
சீனாவில் நோயாளி தந்தையை கவனித்து கொள்கிறார் 6 வயது மகள் ஒருவர்.
சீனா: எதுக்குமே ஒரு குடுப்பினை வேணும் போல இருக்கு. சீனாவில் உள்ள ஒரு குட்டி தேவதையின் செய்தி இது.
நிங்சியா என்று மாகாணத்தில் ஒரு அழகான குடும்பம். கணவன்-மனைவி-மகன்-மகள் என்ற அளவான குடும்பமும் கூடயார் கண்ணு அந்த குடும்பத்துக்கு பட்டதோ தெரியவில்லை, 2016, மார்ச் மாதம் ஒரு கார் விபத்தில் கணவன் மாட்டிக் கொண்டார்.

மனைவி பிரிந்து சென்றார்
இதனை தொடர்ந்து அவருக்கு பக்கவாதமும் வந்துவிட்டது. மனைவிக்கோ பக்கவாதம் பாதிக்கப்பட்ட கணவனை கவனிக்கவும், கூட இருக்கவும் பிடிக்கவே இல்லை. இதனால் இரண்டரை மாதங்களுக்கு முன்பு வீட்டைவிட்டு போய்விட்டார். போனவர் தன் மூத்த மகனையும் உடன் அழைத்து சென்றுவிட்டார். இப்போது வீட்டில் இருப்பது பக்கவாதம் பாதிக்கப்பட்ட தந்தையும், 6 வயது மகளும்தான்! மகள் பெயர் ஜியாஜியா.

ஜியாஜியாதான் எல்லாம்
சக்கர நாற்காலியில் சுழன்று வரும் தந்தையைதான் இந்த மகள் தாய்ப்போல பாவிக்க தொடங்கிவிட்டாள். தன் அப்பாவை அவள் கவனித்து கொள்ளும் அழகையும், பொறுப்பையும் பற்றிதான் இப்போது அந்த நாட்டில் பேச்சாக உள்ளது. காலையில் 6 மணிக்கு ஜியாஜியா எழுந்து கொள்கிறாள். தன் தந்தையின் பக்கவாதம் நோய்க்காக அரை மணி நேரம் மசாஜ் செய்து விடுகிறார். அதன்பிறகு பல்துலக்கி விட்டு, குளிப்பாட்டு விடுகிறாள்.

சுழலும் மணித்துளிகள்
இவ்வளவும் தான் ஸ்கூலுக்கு போவதற்கு முன்பு செய்து முடிக்கிறாள். அதன்பிறகு மாலை வீட்டிற்கு திரும்பியதும், அப்பாவுக்கு இரவு டின்னர்... அதனை தொடர்ந்து கொஞ்ச நேரம் வெளியில் அழைத்து போவது என்று சிறுமியின் 24 மணி நேரம் சுழல்கிறது.

ஷேவ் செய்து விடுகிறார்
சிறுமியின் இந்த உள்ளூர் ஊடகம் வெளியிட இப்போது அனைவருக்கும் தெரிந்து வருகிறது. இதுகுறித்து ஜியாஜியா சொல்லும்போது, தன் அப்பாவுக்கு ஆரம்பத்தில் எப்படி ஷேவ் செய்வது என்றே தெரியவில்லையாம். ஒருமுறை ஷேப் செய்யும்போது முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம்கூட வந்துவிட்டதாம். ஆனால் இப்போது சூப்பராக ஷேவ் செய்து விடுகிறாளாம்.

குட்டி தேவதை
"உன் அம்மாவை ரொம்ப மிஸ் பண்றியாம்மா" என்று கேட்டால், "என் அப்பாவை பார்த்து கொள்ளவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது, ஆனால் என் அண்ணன் இல்லாமல் கஷ்டமாக இருக்கிறது" என்கிறாள் ஜியாஜியா. இந்த சிறுமிக்கு நிறைய விசிறிகள் உருவாகி விட்டார்கள். கைஷூ என்ற ஆப்பில் ஜியாஜியாவை 4 லட்சத்து 80 ஆயிரம் பேர் ஃபாலோ செய்கிறார்களாம். எல்லோரும் சேர்ந்து ஜியாஜியாவுக்கு குட்டி தேவதை என்று பெயரும் வைத்து உள்ளார்களாம்!
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications