இது என்னன்னு பார்த்தீங்களா.. ஒரு நிமிஷம் அப்படியே ஷாக்கில் ஆடிப்போன டேவிட்.. கடைசியில் செம..!
வான்கோழியை ஒரு சிறிய நாய் விழுங்கியுள்ளது
பிரஸ்ட்விக், ஸ்காட்லாந்து: ஒரு போட்டோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது.. அந்த போட்டோவை டக்கென பார்த்தால், அது என்னவென்றே கண்டுபிடிக்க முடியாது.. கடைசியில் விஷயம் இதுதான்!
ஸ்காட்லாந்து நாட்டில் பிரஸ்ட்விக் என்ற பகுதியை சேர்ந்தவர் டேவிட் பாரட்... இவர் இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை தடபுடலாக கொண்டாட முடிவு செய்தார்.. அதற்காக, தன்னுடைய வீட்டில் நைட் விருந்து தயார் செய்தார்.. அந்த விருந்துக்கு முழு வான்கோழி ஒன்றை பிடித்து, அடித்து சமைத்து வைத்தார்.

அதாவது வான்கோழியின் மேற்பகுதியை நன்றாக சுத்தம் செய்துவிட்டு, அதன் வயிற்றுக்குள் மட்டும் மசாலாவை வைத்து அப்படியே ஓவனில் பேக் செய்து எடுத்து வைத்திருந்தார்.. 3 நண்பர்களை வீட்டுக்கு விருந்துக்கும் அழைத்திருந்தார்.. தண்ணி அடிப்பதற்காக அனைத்து மதுபாட்டில்களையும் எடுத்து ரெடியாக வைத்தார்.
அந்த நேரத்தில் வீட்டிற்குள் பப்பா வந்துவிட்டது.. பப்பா என்பது இவர் வீட்டு நாய்.. 5 வயசுதான் ஆகிறதாம்.. பார்ப்பதற்கே குட்டியாக இருக்கிறது.. அதனால், அந்த பப்பா கிச்சனுக்குள் நுழைந்ததை டேவிட் பார்க்கவில்லை.. அந்த பப்பா நேராக உள்ளே நுழைந்து, சுடச்சுட காரசாரமாக சமைத்து வைக்கப்பட்டிருந்த வான்கோழி ஃபிரையை மொத்தமாக தின்று தீர்த்துவிட்டது.
தம்மாதூண்டு பப்பா, அவ்ளோ பெரிய வான்கோழியை சாப்பிட்டுவிட்டு, அதனால் ஒரு அடிகூட எடுத்து வைத்து நடக்க முடியவில்லை.. பிறகு அப்படியே அங்கேயே தரையில் ஃபிளாட் ஆகி படுத்துவிட்டது... ஆசை ஆசையாக வான்கோழியை சாப்பிட போன டேவிட் ஷாக் ஆகி நின்றுவிட்டார்.. திடீரென பப்பா பெரிய சைஸ் பப்பாவாக படுத்து கிடப்பதை பார்த்ததும் சிரித்து விட்டார்.
உடனே செல்போனில் அதை போட்டோ எடுத்து,ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்தார்.. "பப்பாவால் நகர முடியவில்லை... அந்த வான்கோழி மிகவும் பெரியது" என்று பதிவிட்டிருந்தார். அந்த போட்டோதான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது... அவ்ளோ பெரிய வான்கோழியை சாப்பிட்டும் அந்த பப்பா இப்போ நல்லாதான் இருக்காம்.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதெல்லாம் நமக்குதான் போல!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications