6 லட்சம் மக்கள் மட்டும் உள்ள இந்த நாடுதான் 3ம் உலகப் போரை உருவாக்கும்.. பகீர் கிளப்பும் டிரம்ப்
நேட்டோ உறுப்பு நாடுகளில் ஒன்றான மாண்டிநெக்ரோதான் மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
நியூயார்க்: நேட்டோ உறுப்பு நாடுகளில் ஒன்றான மாண்டிநெக்ரோதான் மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
குரேஷியா, செர்பியா, அல்பேனியா என்று மூன்று குட்டி நாடுகளுக்கு இடையில் இருக்கும் குட்டி நாடுதான் மாண்டிநெக்ரோ. இதில் வெறும் 6 லட்சம் மக்கள்தான் இருக்கிறார்கள்.
இந்த குட்டி கடல் அருகே இருக்கும் நாடுதான், உலகப் போரை ஆரம்பிக்கும், என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அதற்கு அவர் காரணமும் சொல்கிறார்.

நேட்டோ படை
நேட்டோவில் மொத்தம் 29 நாடுகள் இருக்கிறது. இதன் விதிப்படி, இந்த குழுவில் ஒரு நாடு தாக்கப்பட்டால், மற்ற எல்லா நாடுகளும் சேர்ந்து எதிர் நாடுகள் மீது போர் தொடுக்க செல்லும். ஒரு சிறிய நாடு தாக்கப்பட்டால் கூட, மற்ற எல்லா நாடுகளும் அதற்கு ஆதரவாக சென்று போர் தொடுக்கும். இதனால் நேட்டோ மிகவும் வலுவான குழுவாக பார்க்கப்படுகிறது.

சின்ன நாடு மாண்டிநெக்ரோ
இந்த நிலயில் இந்த குழுவில் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் மாண்டிநெக்ரோ என்ற குட்டி நாடு இணைந்தது. அந்த குழுவில் இந்த நாடு 29வது நாடாக இணைந்தது. இந்த நாட்டின் மக்கள் தொகை வெறும் லட்சம் மட்டுமே. இதில் வெறும் 2000 ராணுவ வீரர்கள் மட்டுமே இருக்கிறார்கள். நேட்டோவில் இதுதான் மிகவும் சிறிய நாடாகும்.

மோசமானவர்கள்
இந்த நேட்டோ படை குறித்து கேள்விக்கு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பதில் அளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ''நேட்டோ படைகள் உலகப் போரை உருவாக்கும் வல்லமை கொண்டவை. அந்த குழுவில் ஒரு நாடு தாக்கப்பட்டால் கூட மற்ற எல்லா நாடுகளும் சண்டைக்கு செல்லும். இதனால் அந்த குழுவில் ஒரு சின்ன நாடு தாக்கப்பட்டால் கூட மற்ற நாடுகள் போரை உருவாக்கும்'' என்றார்.

3ம் உலகப் போர்
மேலும், நேட்டோவில் இருப்பதிலேயே மிகவும் மூர்க்கமான நாடு, மாண்டிநெக்ரோதான். அதில் குறைவான மக்கள் இருந்தாலும், எல்லோரும் மிகவும் மூர்க்கமாக இருக்கிறார்கள். இதனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் உலகப் போர் உருவாக்கி காரணமாக இருக்கலாம். அந்தநாடு மூன்றாம் உலகப் போரை உருவாக்க வாய்ப்புள்ளது.
-
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications