பெட்ரூமுக்குள் ஸ்மார்ட்போன் அப்படி வந்தால் செக்ஸ் வாழ்க்கை இப்படி வெளியே போய்விடும்
லண்டன்: படுக்கையறைக்குள் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தினால் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
செல்போன்கள் தற்போது ஸ்மார்ட்போன்கள் என்பது மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. பலர் எந்நேரம் பார்த்தாலும் போனும், கையுமாகத் தான் உள்ளனர். இந்த போன்களால் தாம்பத்ய வாழ்க்கையில் கூட பிரச்சனை ஏற்படுகிறது. உங்ளுக்கு நான் வேண்டுமா, செல்போன் வேண்டுமா என்று மனைவி கணவரை பார்த்து கேட்கும் அளவுக்கு அவர்கள் போனை பயன்படுத்துகிறார்கள்.

இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் ஸ்பெகல்ஹால்டர் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளார்.
தனது ஆய்வு குறித்து அவர் கூறுகையில்,
படுக்கையறையில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவதால் தம்பதிகளின் செக்ஸ் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாதத்தில் 5 முறை கூட தம்பதிகள் உறவு கொள்வது இல்லை என்றார்.


Click it and Unblock the Notifications
