அயோ பாம்பூ... மெக்சிகோ விமானத்தில் களேபரம்!
மெக்சிகோ விமானம் ஒன்றில் குட்டி பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் பீதியடைந்தனர்.
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ விமானம் ஒன்றில் குட்டிப் பாம்பு பெரிய பீதியைக் கிளப்பி விட்டு விட்டது.
விமானம் பறந்து கொணடிருந்தபோது இந்த குட்டிப் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அச்சமடைந்தனர். தலைக்கு மேலே இருந்த சூட்கேஸ்களுக்கு மத்தியில் பாம்பு இருந்ததால் பயணிகள் பெரும் பீதியடைந்து விட்டனர்.

இதை ஒரு பயணி வீடியோ எடுத்து வெளியில் விட்டுள்ளார். இது வைரல் ஆகப் பரவியுள்ளது.
இதுகுறித்து மெதினா என்ற பயணி கூறுகையில் நான் புக் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது அருகில் இருந்த இன்னொரு பயணி பாம்பைப் பார்த்து விட்டு அலறினார். நான் பயந்து விட்டேன். அந்தப் பாம்பு 3 அடி நீளம் இருக்கும் என்றார்.
தலைக்கு மேல் பாம்பைப் பார்த்த பயணிகள் எங்கே தலை மீது விழுந்து விடுமோ என்ற பயத்தில் அவசரம் அவசரமாக சீட்டை விட்டு ஓடினர்.
பாம்பு விமானத்தில் இருந்தது தெரிய வந்ததும் விமானம் அவசரமாக மெக்சிகோ சிட்டியில் தரையிறக்கப்பட்டது. பின்னர் பாம்பு வெளியே கொண்டு செல்லப்பட்டது. பிறகே நிலைமை சகஜமாக மாறியது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications