டீனேஜ் பெண்களின் சுய கௌரவத்திற்கு வேட்டு வைக்கும் சமூக வலைதளங்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்
லண்டன்: சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் பதின்வயது சிறுமிகள் அதாவது டீனேஜ் பெண்களின் சுயகௌரவம் குறைவது கணக்கெடுப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்தில் பள்ளி மாணவ, மாணவியரின் சுயகௌரவம் பற்றி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் 30 ஆயிரம் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். அதில் 14 முதல் 15 வயது வரை உள்ள சிறுமிகளில் தங்கள் மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கடந்த 2007ம் ஆண்டில் 14 முதல் 15 வயது வரை உள்ள சிறுமிகள் 41 சதவீதம் பேர் தங்களுக்கு அதிக சுயகௌரவம் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது வெறும் 33 சதவீதம் பேரே அதிக சுயகௌரவம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆன்லைனில் தொடர்புகள் அதிகரித்திருப்பது, சமூக வலைதள பயன்பாடு, பொருளாதார நிலைமை சரியில்லாதது ஆகியவை பல டீனேஜ் பெண்களின் சுயகௌரவத்தை குறைத்துள்ளது என்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
14 முதல் 15 வயது வரை உள்ள சிறுமிகளில் நான்கில் 3 பேர் ஆன்லைனில் சாட் செய்துள்ளனர். அதில் 13 சதவீதம் பேர் மனதை பாதிக்கும், பயப்படும் வகையிலான தகவலை பெற்றுள்ளனர்.
ஐந்தில் ஒரு சிறுமி தனக்கு யார் என்றே தெரியாத நபரிடம் சாட் செய்துள்ளார். மாணவ, மாணவியரில் பலர் ஆன்லைனில் ஆபாசம் மற்றும் வன்முறை தொடர்பான புகைப்படங்களை பார்த்துள்ளனர். ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் மாணவ, மாணவியர் கண்காணிக்கப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications