பூமியைத் தாக்கும் சூரியப் புயல்... செயற்கைக்கோள்களுக்கு ஆபத்து?
சூரியப் புயல் இன்று பூமியைத் தாக்கலாம் என நாசா தெரிவித்துள்ளது.
நியூயார்க்: சூரியப் புயல் இன்று பூமியைக் கடுமையாக தாக்கும் அபாயம் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.
சூரியப் புயல் என்பது சூரிய கிளரொளியில் (Solar Flare) இருந்து ஆரம்பிக்கும். சூரிய கிளரொளி என்பது சூரியனில் ஏற்படும் மிகப்பெரிய வெடிப்பாகும்.

இத்தகைய பெரிய வெடிப்பின் காரணமாக சூரியனின் மேற்பரப்பில் இரண்டு மிகப்பெரிய தீப்பிழம்புகள் உருவாகியுள்ளதாகவும், அது வழக்கத்தைவிட அதிக திறனுடன் பூமியை நோக்கி பாய்ந்து வருவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் ஒரு 'G1' புயல் கடிகாரத்தை வெளியிட்டு உள்ளது.
இந்த சூரியப் புயலின் தாக்கமானது, பூமியின் காந்த விசையுடன் மோதி கரும் புயலாகவும் என நாசா தெரிவித்துள்ளது. இதனால் பூமியின் இயற்கைத்தன்மை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
அதோடு, சூரியப் புயலால் அதிகம் பாதிக்கப்படுவது நமது தொழில்நுட்பங்கள் தான். அதன்படி, இந்த சூரியப்புயலால், தற்போது பூமியைச் சுற்றி வரும் நூற்றுக்கணக்கான செயற்கை கோள்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
மேலும், விமானங்களின் 'ஜி.பி.எஸ்.’ சிஸ்டமும், பூமியில் சில இடங்களில் மின் வினியோகத்திலும் இந்த சூரியப்புயல் பாதிப்பை ஏற்படுத்தும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய சூரியப் புயலானது ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்தின் பகுதிகளையும், மிச்சிகன் மற்றும் முக்கிய பகுதிகளையும் உள்ளடக்கிய அமெரிக்காவின் வடக்குப் பகுதிகளையும் பாதிக்கும் என நாசா அறிக்கை கூறுகிறது.
இதுவரை அளக்கப்பட்ட சூரிய கிளரொளிகளிலேயே மிகவும் பலமானது எக்ஸ்-28 சூரிய கிளரொளிதான் என்பதும், அது கடந்த 2003-ஆம் ஆண்டு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications