எதிஹாட் ஏர்வேஸின் சொகுசு விமானம்: ஒன்வே டிக்கெட் ரூ. 12 லட்சமே, அதுவும் விற்றுத் தீர்ந்தது
அபுதாபி: எதிஹாட் ஏர்வேஸ் விமானத்தில் உள்ள சொகுசு பகுதியில் 2 பேர் ஒருவழிப் பயணம் செய்ய ரூ. 12 லட்சம் செலவாகும் என்கிற போதிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த எதிஹாட் ஏர்வேஸ் புதிய சொகுசு விமானத்தை வரும் டிசம்பர் மாதத்தில் இயக்க உள்ளது. ஏர்பஸ் ஏ380 என்ற இந்த சொகுசு விமானம் அபுதாபியில் இருந்து லண்டனுக்கு செல்லும்.
இங்கிலாந்தைச் சேர்ந்த பி/இ ஏரோஸ்பேஸ் உருவாக்கியுள்ள இந்த சொகுசு விமானத்தில் 500க்கும் குறைவானவர்கள் பயணம் செய்யலாம்.

டிக்கெட்
2 பேர் அபுதாபியில் இருந்து லண்டன் செல்ல ஒரு வழிப்பயணத்திற்கு மட்டும் டிக்கெட் செலவு ரூ. 12 லட்சம் மட்டுமே. இது விமானத்தில் உள்ள விஐபி அறையின் டிக்கெட் விலை.

ரெசிடென்ஸ்
விமானமாக இருந்தாலும் அதில் சிறு சிறு அபார்ட்மென்ட் மாடல்கள் உள்ளன. ரெசிடென்ஸ் என்று அழைக்கப்படும் அதில் இரண்டு படுக்கையறைகள், ஒரு ஹால், குளியல் அறை உள்ளது.

வசதிகள்
ஒவ்வொரு ரெசிடென்ஸிலும் 64 இன்ச் ஸ்லைடிங் கதவு, சிறிய பார், உடைகள் வைக்க பீரோ, 24 இன்ச் டிவி உள்ளது. ரெசிடன்ஸ் வாசிகளுக்கு என்று தனியாக சமையல்காரர்களும் உண்டு. இந்த சொகுசு பயணம் செய்பவர்களுக்கு வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கும், விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கும் கொண்டு விட தனி டிரைவர் உண்டு.

விற்றுத் தீர்ந்தது
ரெசிடன்ஸ் டிக்கெட்டின் விலை ரூ.12 லட்சமாக இருப்பினும் முதல் 10 விமான சேவைகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

முதல் வகுப்பு
ரெசிடன்ஸ் அதிகம் என்று நினைப்பவர்கள் முதல் வகுப்பு அபார்ட்மென்ட் எடுக்கலாம். அபார்ட்மென்ட்டில் சமையல்காரர் வசதி எல்லாம் இல்லாவிட்டாலும் சிறிய இடத்தில் சொகுசாக பயணிக்கலாம்.

பிசினஸ் கிளாஸ்
பிசினஸ் கிளாஸில் பெரிய சீட்கள் உள்ளன. அவற்றை படுக்கையாகவும் மாற்றிக் கொள்ளும் வசிதியும் உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications