டிரம்பிற்கு புதிய தலைவலி.. சுலைமானி படுகொலை வழக்கில் டிரம்ப்பிற்கு பிடிவாரண்ட்
தெஹ்ரான்: ஈரான் ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி படுகொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் அதிபர் டிரம்பிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது ஈராக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரான் நாட்டின் ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி, கடந்தாண்டு ஜனவரி மாதம் ஈராக் நாட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையம் அருகே அமெரிக்கா ராணுவம் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் சுலைமானி கொல்லப்பட்டார்.

இதற்குப் பதிலடியாக ஈரான் ராணுவமும் அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பல அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இத்தாக்குதலில் ஐஸ் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராட ஈராக் அரசால் உருவாக்கப்பட்ட பாதுகாப்புப் படையின் துணை தலைவர் அபு மஹ்தி அல் முஹந்திஸ் என்பவரும் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், அபு மஹ்தி அல் முஹந்திஸ் கொல்லப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஈராக் உச்ச நீதிமன்றத்தில் அவரது குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்தனர்.
இன்று நடைபெற்ற இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஈராக் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் டிரம்பிற்கு அதிகபட்சமாக மரண தண்டனை வரை விதிக்க முடியும்.
டிரம்பை கைது செய்து ஈராக் நாட்டிற்கு நாடு கடத்துவது நடைபெற்ற வாய்ப்பே இல்லை என்றாலும்கூட, அதிபராகத் தனது கடைசி நாட்களில் இருக்கும் டிரம்பின் மீது ஈராக் எவ்வளவு கோபத்தில் உள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே இது உள்ளது.
முன்னதாக, ஈரான் அரசும் அதிபர் டிரம்ப் உள்ளிட்ட 30 பேர் மீது கொலை மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் ஆகிய குற்றச்சாட்டுகளை முன் வைத்து, பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது. மேலும் அப்போதே ஈரான் டிரம்ப்பின் அதிபர் பதவிக் காலம் முடிவடைந்த பின்னரும் அவர் மீதான வழக்கு நிச்சயம் தொடரும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications