சவுதிக்கு வேலைக்கு சென்று படாதபாடு படும் இந்தியர்களின் பரிதாபத்தை கூறும் புத்தகம்
டெல்லி: சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள் தங்களின் முதலாளிகளால் படும் அவஸ்தை குறித்து புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் வேலை செய்யும் இந்தியர்கள் அவர்களின் முதலாளிகளால் படும் துன்பங்கள் குறித்து பல செய்திகள் வெளியாகி வருகின்றது. ஆனாலும் அந்த அவலம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

ஜார்க்கண்டை சேர்ந்த 25 வயது பெண்ணின் கணவர் சவுதியில் வேலைக்கு சென்ற இடத்தில் தனது முதலாளியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை பார்க்க அந்த பெண் ஓராண்டு காலமாக காத்துள்ளார்.
சவுதியில் இந்தியர்கள் படும் அவதி குறித்து பத்திரிக்கையாளராக இருந்து எழுத்தாளரான ஜாய் சி. ரபேல் புத்தம் ஒன்றை எழுதியுள்ளார். Sour and Sweet: Expat Stories from Arabia என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புத்தகத்தில் சவுதியில் அரபிகளால் இந்திய தொழிலாளர்கள் படும் அவஸ்தை பற்றி விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா, அமீரகம், ஓமன், குவைத்திற்கு வேலைக்கு சென்ற இடத்தில் இந்தியர்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டு முதலாளிகளால் கொடுமைப்படுத்தப்படுவதை அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார் ஜாய். கேரளாவை சேர்ந்த ஜாய் ரியாத்தில் பத்திரிக்கையாளராக இருந்தவர்.
கடப்பாவை சேர்ந்த ராணி சவுதிக்கு வேலைக்கு சென்ற இடத்தில் முதலாளி மற்றும் அவரது மகனால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு சம்பளமும் அளிக்காமல் இருந்துள்ளனர். இதையடுத்து அவர் அங்கிருந்து தப்பியோடி வேறு ஒரு இடத்தில் வேலைக்கு சேர்ந்த விபரம் ஜாயின் புத்தகத்தில் உள்ளது.
குடும்பத்திற்காக வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள் இவ்வளவு கஷ்டப்படுகிறார்களா என்று வியக்கும் அளவுக்கு அந்த புத்தகத்தில் தகவல் உள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications