Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு.. இவ்வளவு கொண்டாட்டமா? உற்று நோக்கும் மேற்கு நாடுகள்! விஷயமே வேற!

Subscribe to Oneindia Tamil

கேப் டவுன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, தென்னாப்பிரிக்கா கோப்பை வென்றிருக்கிறது. இது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டங்களுக்கு காரணம் வெறும் கிரிக்கெட் மட்டுமல்ல, அரசியலும் இருக்கிறது.

சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த அணியாக தென்னாப்பிரிக்கா இருந்தாலும் கூட, அந்த அணியால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை மட்டும் கைப்பற்ற முடியவே இல்லை. ஒவ்வொரு முறையும், காலிறுதி வென்று அரையிறுதிக்குள் நுழையும் இந்த அணி, இறுதிக்கான போட்டியில் சொதப்பி விடும். அப்படியே அதிசயமாக விளையாடி இறுதியில் நுழைந்தால், மழை போட்டியை கெடுத்துவிடும். இப்படியாக 'கப்' அடிக்கும் கனவு தள்ளிபோய்க்கொண்டே வந்தது.

south africa reservation wtc final australia

இந்த முறை 27 ஆண்டுகளுக்கு பிறகு, தென்னாப்பிரிக்கா கோப்பையை வென்றிருக்கிறது. இதனை கிரிக்கெட் ரசிகர்கள் தாண்டி, கிரிக்கெட்டை போட்டிகளில் பெரியதாக ஆர்வம் இல்லாதவர்களும் கொண்டாடி வருகின்றனர். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

முதல் காரணம்

முதல் காரணம் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் 'டெம்பா பவுமா'. ஏனெனில் அவர் வீழ்த்தியது சாதாரண அணி கிடையாது, 'Mighty Aussies' என்று சொல்லப்படும் ஆஸ்திரேலிய அணி.

போட்டி என்று வந்துவிட்டால் 100% முழு அர்ப்பணிப்புடன், காட்டுத்தனமாக விளையாடி வெற்றியை தொடர்ந்து ரசித்துக்கொண்டிருக்கும் அணி அது. முழுவதுமாக வெள்ளையர்களை கொண்ட அந்த அணியை, கறுப்பின தலைவன் 'டெம்பா' தோற்றகடித்துள்ளான். இது நிறவெறி சக்திகளுக்கு எதிரான பதிலடியாக பார்க்கப்படுகிறது.

என்ன ப்ரோ சொல்றீங்க? நாம 21வது நூற்றாண்டில் இருக்கிறோம். இன்னுமா நிறவெறி இருக்கு? என நீங்கள் கேட்கலாம். இந்தியாவில் சாதி ஒழியவில்லையா? என்று கேட்பதற்கு நிகரான கேள்விதான் அது. இதற்கு 'இல்லை' என்று பதில் வந்தால், முதல் கேள்விக்கும் 'இல்லை' என்பதுதான் பதில்.

நிறவெறியும் டெம்பாவும்

ஏனெனில் தலைவன் 'டெம்பா' நிறவெறியை பல இடங்களில் எதிர்கொண்டிருக்கிறார். அவ்வளவு ஏங்க.. அவங்க சொந்த நாடான தென்னாப்பிரிக்காவிலேயே அவருக்கு எதிராக நிறவெறி தாக்குதல் இருந்தது. ஒருமுறை இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தலைவன் 'டெம்பா' சதம் அடித்திருந்தார். அந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றியும் பெற்றது. ஆனால் அந்நாட்டு செய்தி தாளில், 'டெம்பா' கிளீன் போல்ட் ஆகும் போட்டோ பிரசுரிக்கப்பட்டிருந்தது.

இப்படியான புறக்கணிப்புக்கு நடுவில், கோப்பையை வென்றது, ஒடுக்கப்பட்ட மக்களின் வெற்றிக்கு சமமாக பார்க்கப்படுகிறது.

இரண்டாவது காரணம்

இந்த வெற்றி கொண்டாட்டத்திற்கு இரண்டாவது காரணம், தென்னாப்பிரிக்காவில் நிலவும் அரசியல் சூழல்தான். சமீப காலமாக அமெரிக்காவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா வெளிப்படையாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக 'நில சீர்த்திருத்த சட்டத்தை' கடுமையாக அமல்படுத்த தொடங்கியுள்ளது.

அதாவது, 1948-94 வரை அந்நாட்டில் காலனித்துவ, நிறவெறி ஆட்சி இருந்தது. ஐரோப்பிய நாட்டை சேர்ந்த வெள்ளையர்கள் ஆப்பிரிக்காவை ஆட்சி செய்தனர். அவர்கள், அங்கு தங்களுக்குள் நிலங்களை பங்கிட்டு கொண்டனர். ஆனால், பூர்வகுடி மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. அவர்கள் வெள்ளையர்களின் (சொந்த மண்ணில்) நிலங்களில் பண்ணை அடிமைகளாக மாற்றப்பட்டனர்.

வெள்ளையர்களும் நிலமும்

இன்றைய தேதியில் அந்நாட்டில் உள்ள வெள்ளையர்களின் எண்ணிக்கை 10% தான். ஆனால் அவர்கள் 72% நிலத்தை கையில் வைத்திருக்கிறார்கள். எனவே, அவர்களிடமிருந்து நிலத்தை அரசு பிடுங்கி வருகிறது. நில சீர் திருத்த சட்டத்தின் கீழ் இதை அரசு செய்து வருகிறது. இதற்கு எந்த இழப்பீடும் வழங்கப்படாது என்றும் அறிவித்திருக்கிறது.

அமெரிக்காவுக்கு எதிரான மெசேஜ்

இந்த நடவடிக்கை ஐரோப்பிய நாடுகளையும், அமெரிக்காவையும் உசுப்பிவிட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வெளிப்படையாக எச்சரித்த அமெரிக்கா, நிதி வெட்டு, சர்வதேச ஆதரவு வாபஸ் என.. எல்லா வழிகளிலும் அந்நாட்டுக்கு முட்டுக்கட்டை போட தொடங்கியுள்ளது.

இப்படி இருக்கையில்தான் அமெரிக்காவின் ஆதர்ச நண்பனான, ஆஸ்திரேலியாவை வெற்றி பெற்று தனது எதிர்ப்பை, தென்னாப்பிரிக்கா விளையாட்டு துறையிலும் காட்டியிருக்கிறது. எனவேதான் தென்னாப்பிரிக்காவின் வெற்றியை பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+