கறுப்பினத்தவரை உயிரோடு சவப்பெட்டியில் அடைத்த வெள்ளை ஆப்பிரிக்கர்கள்... நிறவெறியின் உச்சம்!
தென் ஆப்பிரிக்காவில் கறுப்பினத்தவரை 2 வெள்ளை ஆப்பிரிக்கர்கள் வலுக்கட்டாயமாக உயிரோடு சவப்பெட்டியில் அடைத்து மிரட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிடெல்பர்க் : தென் ஆப்பிரிக்காவில் கறுப்பினத்தவரை வெள்ளை ஆப்ரிக்கர்கள் உயிரோடு சவப்பெட்டியில் அடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இனவெறி ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை பெற்ற பிறகும் கூட தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி கலவரங்கள் இன்றளவும் அரங்கேறி வருகின்றன. தென் ஆப்பிரிக்காவில் இனவெறியால் கறுப்பின மக்கள் படும் துயரங்கள் உலகம் அறிந்தது. இந்நிலையில் அங்கு தற்போது கறுப்பின ஆப்பிரிக்கர் ஒருவரை உயிருடன் வலுக்கட்டாயமாக சவப்பெட்டியில் அடைக்கும் வெள்ளை ஆப்பிரிக்கர்கள் அவரை பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவதாகவும்,சவப்பெட்டிக்குள் பாம்பை விட்டுவதாகவும் மிரட்டுகின்றனர்.

இந்த சமூக வலைதளங்களில் வெளியான இந்த புகைப்படம் மற்றும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபட்ட வெள்ளை ஆப்பிரிக்கர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கண்டன குரல்கள் எழுந்துள்ளன.
இதனிடையே பாதிக்கப்பட்ட விக்டர் மிலாட்ஸ்வா என்ற கறுப்பின ஆப்பிரிக்கர் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2 பேரையும் சிறையிலடைக்க ஆணையிட்டதோடு மறு விசாரணையை வரும் ஜனவரி 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து சிறையிலடைக்கப்பட்ட இருவரும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பெயில் கோர போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications