மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் தென்னாப்பிரிக்க அழகி நெல் பீட்டர்ஸ் #MissUniverse
மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்று தென்னாப்பிரிக்காவை சேர்ந்த அழகி கிரீடம் சூடியுள்ளார்.
Recommended Video

லாஸ்வேகஸ்: அமெரிக்காவில் நடைபெற்ற பிரபஞ்ச அழகிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த டெமி லெய்க் நெல் பீட்டர்ஸ் பட்டம் வென்று மகுடம் சூடினார்.
இரண்டாவது இடத்தை கொலம்பியா நாட்டு அழகியும், மூன்றாவது இடத்தை ஜமைக்கா நாட்டுப்பெண்ணும் தட்டிச்சென்றனர்.

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் உள்ள பிளானெட் ஹாலிவுட் ரிசார்ட் அண்ட் கேசினோ என்னுமிடத்தில் 66வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடைபெற்றது. இதில் 92 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.
அவர்களுக்கு அறிவுத் திறன், நீச்சல் உடை, மாலை நேர உடை என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு இறுதிப்போட்டிக்கு 10 அழகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இறுதிச்சுற்றில் தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 22 வயதான நெல் பீட்டர்ஸ் பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்று மகுடம் சூடினார். கடந்த ஆண்டு பட்டம் வென்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபஞ்ச அழகி ஐரீஸ், கிரீடத்தை சூட்டி விட்டார். ஆனந்த கண்ணீர் மல்க மகுடம் சூடிக்கொண்டார் நெல் பீட்டர்ஸ்.
மிஸ்யுனிவர்ஸ் பட்டம் வென்ற அழகிக்கு பரிசாக நியூயார்க் நகரில் அபார்ட்மென்ட் உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் கிடைத்துள்ளன.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications