Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

9 வயது சிறுவனை 2வது முறையாக மணந்த 62 வயது பாட்டி!

Subscribe to Oneindia Tamil

ஷிம்குங்வே: தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 62 வயது பாட்டி 9 வயதேயான சிறுவனை 2 வது முறையாக திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு தென் ஆப்பிரிக்காவின் ஷிம்குங்வே பகுதியை சேர்ந்தவர் ஹெலன் ஷாபாங்கு ( வயது 62) இவரது கணவர் ஷாபாங்கு (வயது 66) இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.

ஹெலன் ஷாபாங்குவின் இறந்த முன்னோர்கள் கனவில் வந்து கூறியதால் பாரம்பரியத்தை முன்னிட்டு இவர் 9 வயது நிரம்பிய ஷானாலே மசிலிலா என்ற பள்ளி மாணவனை 2 வது முறையாக திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீலம் மற்றும் வெள்ளி நிற உடையில் மணமக்கள் கலந்து கொண்டனர்.

அரிசி தூவி ஆசிர்வாதம்

அரிசி தூவி ஆசிர்வாதம்

திருமண விழா புமலங்கா பகுதியில் நடைபெற்றது திருமணவிழாவில் 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். மணமகளின் உண்மையான கணவர் ஷாபாங்கும் பங்கேற்றார். மணமகள்-மணமகன் மீது அரிசி தூவி ஆசீர்வாதம் செய்தனர்.

முத்தம் கொடுத்த பாட்டி

முத்தம் கொடுத்த பாட்டி

விருந்தினர்கள் புத்தாடை அணிந்து ஆடி பாடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் ஒருவர் மணமக்களை வாழ்த்தினார். மணமகள் மாப்பிள்ளை சிறுவனுக்கு முத்தம் கொடுத்தார். அடுத்து நீண்டநாள் கணவருக்கும் முத்தம் கொடுத்தார்.

பாரம்பரிய முறைப்படி

பாரம்பரிய முறைப்படி

ஷானாலே குடும்பம் இந்த விழாவுக்காக 1, 500 மரிக்க டாலர் செலவழித்து உள்ளது. ஷாபாங்கு கூறுகையில் இறந்த முன்னோர்கள் கேட்டு கொண்டதற்காக இந்த திருமண விழா நடத்தப்பட்டது.என்று கூறினார்.

குடும்பத்தினர் மகிழ்ச்சி

குடும்பத்தினர் மகிழ்ச்சி

ஹெலன் ஷாபாங்கு கூறுகையில், எங்கள் முன்னோர்களின் மகிழ்ச்சிக்காக எனது குடும்பத்தினர் ஒத்துழைப்புடன் இந்த திருமணம் நடந்து உள்ளது. என கூறினார் நானும் எனது குழந்தைகளும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

எதைப்பற்றியும் கவலையில்லை

எதைப்பற்றியும் கவலையில்லை

இந்த சிறுவன் திருமணம் ஒரு பிரச்சினை அல்ல. மற்றவர்கள் கூறுவது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. என்னை இந்த சிறுவன் மணமகளாக தேர்வு செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

பள்ளிக்குப் போவேன்

பள்ளிக்குப் போவேன்

மாப்பிள்ளை சிறுவன் கூறும் போது நான் மீண்டும் திருமணம் செய்து கொள்வேன் பெரியவனாகும் போது, ஹெலனை திருமணம் செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நான் தொடர்ந்து பள்ளிக்கூடம் சென்று எனது கல்வியை தொடருவேன் என கூறினான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+