50 ஆண்டுகளுக்கு பிறகு அதிரவைத்த தென்கொரியா! அவசர நிலை நீடித்திருந்தால்.. என்னவெல்லாம் நடந்துருக்கும்
சியோல்: தென்கொரியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு பிறகு வாபஸ் பெறப்பட்டது. இரவோடு இரவாக இந்த அறிவிப்பை தென்கொரிய அதிபர் வெளியிட்டுள்ளார். அவசரநிலை பிரகடனம் நீடித்து இருந்தால் தென்கொரியாவில் என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தென்கொரியவில் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இரவோடு இரவாக இந்த அறிவிப்பை தொலைக்காட்சியில் தோன்றி தென்கொரிய அதிபர் யூன் சாக் யோல் அறிவித்துள்ளார். ஜனநாயக நாடான தென்கொரியாவில் கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் சாசன அமைப்பை காப்பாற்றவே மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தென்கொரிய அதிபர் அறிவித்ததை ஏற்க மறுத்த அந்நாட்டு எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அதிபரின் உத்தரவை ஏற்க மறுத்து நாடாளுமன்றத்தில் தீர்மனம் கொண்டு வந்தன.
தென்கொரியாவில் எங்கு பார்த்தாலும் ஒரே பரபரப்பாக காட்சியளிக்கிறது. நாடாளுமன்றத்தை சுற்றிலும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தென்கொரிய நடாளுமன்றத்தில் அவரது கட்சி பெரும்பான்மையை இழந்தது. எதிர்கட்சிகளின் தொடர் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. பட்ஜெட் விவகாரத்திலும் மோதல் போக்கு ஏற்பட்டது.
இத்தகைய சூழலுக்கு மத்தியில் தான் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் கடுமையான எதிர்ப்பால் அவசர நிலையை திரும்ப பெறுவதாக தென்கொரிய அதிபர் அறிவித்தார். ஒருவேளை அவசர நிலை பிரகடனத்தால் நீடித்து இருந்தால் அங்கு என்ன நடக்கும்? என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் இருக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
* அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் முடக்கப்படும். நாடாளுமன்றம், உள்ளூர் கவுன்சில்கள், அரசியல் கட்சிகள், பேரணிகள், போராட்டங்கள் என அனைத்தும் தடை செய்யப்படும்.
* ஊடகங்கள் முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும். பிரிண்ட், ரேடியோ, தொலைக்காட்சி, இணையதளம், சமூக வலைத்தளம் என அனைத்தும் தீவிர தணிக்கை செய்யப்படும்.
* தென்கொரியாவில் இந்த சட்டம் அமலில் இருக்கும் வரை எந்த ஒரு போராட்டத்தையும் முன்னெடுக்க முடியாது. வன்முறை பதற்றத்தை தூண்டும் வகையில் பேசக்கூடாது.
* மருத்துவர்கள், நர்சுகள் என அனைத்து மருத்துவ பணியாளர்களும் அடுத்த 48 மணி நேரத்திற்குள் சமூக மருத்துவ பணிக்கு திரும்ப வேண்டும்.சம்பந்தப்பட்ட அதிகரிகள் உத்தரவை ஏற்று முழுமையாக பணியாற்ற வேண்டும். பணி செய்ய தவறினால் அவசர சட்ட விதிகளின் படி கடும் நடவடிக்கை எடுக்கபடும்.
* அவசர நிலை பிரகடனத்தால் பொதுமக்களின் அன்றாட வாழ்விலும் சற்று சிரமமான சூழல் ஏற்படும். அரசு உத்தராவி மீறினால் உடனடியாக கைது, தடுப்புக்காவலில் வைக்கப்படுவார்கள்.
தென் கொரியாவில் இதற்கு முன்பாக கடந்த 1979 ஆம் ஆண்டு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. நீண்ட கால அதிபர் ஆட்சி கவிழ்ப்பின்போது படுகொலை செய்யப்பட்டார். அப்போது ராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது. தென்கொரியா நாடாளுமன்ற ஜனநயகமாக 1987 ல் மாறியது. அதன்பிறகு இப்போதுதான் முதல் முறையாக அவசர நிலை அறிவிக்கப்பட்டது. அதுவும் 6 மணி நேரத்தில் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications